For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீடு கட்ட ஆசி தரும் வாஸ்து பகவான் - தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம்

வாஸ்து நாளை முன்னிட்டு தைமாதம் 12ஆம் தேதி ஜனவரி 25ஆம் வியாழக்கிழமை தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: வாஸ்து நாளை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி தைமாதம் 12ஆம் நாள் வியாழக்கிழமை தன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவான் ஆலயத்தில் வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. இந்தியாவில் வாஸ்து பகவானுக்கு என தனி கோவில் இங்கு அமைந்துள்ளது சிறப்பம்சம்.

இந்திய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், மேலை நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வேலூர், வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து, நோயற்ற வாழ்வை அருளும் ஸ்ரீ தன்வந்திரி பகவானை தரிசித்து விட்டு, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருள் ஆசிபெற்று சென்றவண்ணம் உள்ளனர்.

எங்களுக்கு சரியான வீடு, வாசல் அமையவில்லை, சொந்த வீடு இல்லை, திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, தொழில், உத்யோகம் சிறப்பாகயில்லை என்ற குறைகள் வேண்டாம். எது நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும். இடைவிடாத தெய்வ பக்தியும், பரிகார ஹோமங்களும் அவ்வப்போது செய்து வந்தால், பூர்வ ஜன்ம தீவினைகளில் இருந்து ஒருவர் மீண்டு, நலம் பெறுவது நிச்சயம்.

தன்வந்திரி கோவில்

தன்வந்திரி கோவில்

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து பகவான் அமைப்பு

வாஸ்து பகவான் அமைப்பு

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிரமங்கள் குறையும்

சிரமங்கள் குறையும்

வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

குடியிருக்க வீடு

குடியிருக்க வீடு

சிறிய தொழில், பெரிய தொழில் செய்வ்வோர்க்கும், வியாபாரம் செய்வ்வோர்க்கும் மற்றும் ப்லவகை நிறுவனங்களில் பணிபுரியோர்க்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கேற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிருக்கும் வாடக வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பதுவும் சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்கு கேள்வியாக இருக்கும்.

மனை வீடு வாஸ்து

மனை வீடு வாஸ்து

வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து விழிப்பு நாள்

வாஸ்து விழிப்பு நாள்

தைமாதம் 12ஆம் தேதி 25.01.2018 வியாழக்கிழமை காலை 10.40 முதல் 11.15 வரை வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும்.

வாஸ்து விழித்திருக்கும் நாள்

வாஸ்து விழித்திருக்கும் நாள்

ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது.

வாஸ்து பூஜைக்கு ஏற்ற நட்சத்திரங்கள்

வாஸ்து பூஜைக்கு ஏற்ற நட்சத்திரங்கள்

வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரோஹிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கூடிய நாட்களில், துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கூடிய நாட்களில் பூமி பூஜை செய்யலாம். நாம் தேர்ந்தெடுக்கும் லக்னத்துக்கு 8, 12ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியவிதியாகும்.

பரிகார பூஜை

பரிகார பூஜை

உத்திராடம், பரணி, பூரம் பூராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் உள்ளவர்கள், இன்று பூமிபூஜை செய்யாமல் வேறுநாளில் செய்வது நல்லது. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் பூமி பூஜை செய்தால் பரிகார பூஜை செய்வது நல்லது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

English summary
Vasthu Homam Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Vasthu Homam and Abhishekam Conducted at Sri Arogya Peedam, Walajapet on Vasthu Day 25.01.2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X