விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்
விளம்பி புத்தாண்டு நல்ல நேரத்தில் பிறக்கிறது. கடகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது.
Recommended Video

சென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் கடகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், யோகமும் கொண்ட ஆண்டாக அமையப் போகிறது.
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது. இது நன்மை தரும் அமைப்பாகும்.
குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். கடகம் ராசிக்காரர்களுக்கு விளம்பி புத்தாண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

கடகம்
அமைதியும், அன்பும் நிறைந்த கடக ராசிக்காரர்களே... இந்த புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் நான்காமிடத்தில் இருக்கிறார். இது சாதகமற்ற அமைப்பு என்றாலும் புரட்டாசி மாதம் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான உங்கள் புத்திர ஸ்தானமாக ஐந்தாம் பாவத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகள் ஏற்படும்.

கெட்டி மேள சத்தம்
நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கு பிறகு திருமணம் கைகூடும்.

தம்பதிகள் ஒற்றுமை
திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களின் வீட்டில் தொட்டில் ஆடக்கூடிய நேரம் வரப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து அமைதி நிலவும். கணவன் மனைவி உறவு பலப்படும். பணி நிமித்தமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

வண்டி வாகனம்
பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு மனை வாங்கக் கூடிய யோகம் கூடி வரும்

வெளிநாட்டு யோகம்
ஜென்மத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். வரும் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ராகு 12வது இடத்திற்கு இடம் மாறுகிறார். தற்போது 7 வது இடத்தில் இருக்கும் கேது பிப்ரவரி மாதத்தில் 6வது இடத்திற்கு மாறுகிறார்.
மாணவ மாணவிகளுக்கு மாநில அளவில் சாதனை புரிவதற்கு உரிய வாய்ப்புகள் இந்த ஆண்டு அமையும். வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முயற்சி செய்யலாம். அதனால் நன்மைகளும் இருக்கும்.

சனி செவ்வாய் கூட்டணி
ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் கூட்டணி அமைத்து அமர்ந்திருக்கிறார்கள். இது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும் கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும். விளம்பி தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்கள் கொண்டாட்டமாக தொடங்கலாம். மகிழ்ச்சியும் யோகமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]
-
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications