• search

விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்

By Mayura Akhilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   தமிழ் புத்தாண்டு பலன்கள் : துலாம்

   சென்னை: விளம்பி ஆண்டு 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டின் முதல்பகுதியை விட பிற்பகுதியில் அதிக நற்பலன்கள் கிடைக்கும்.

   புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது. இது நன்மை தரும் அமைப்பாகும்.

   குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு விளம்பி புத்தாண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

   துலாம் ராசி (சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

   துலாம் ராசி (சித்திரை , 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

   போராட்ட குணமும் அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த புது ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குருவும் தைரிய வீரிய ஸ்தானத்தில் சனியும், சுக ஸ்தானத்தில் கேதுவும் தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. சிலருக்கு ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும்.

   குருவின் பார்வை

   குருவின் பார்வை

   ராசியிலேயே குருவின் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உடலில் இருந்து வந்த மந்த நிலை மாறும். குரு பார்வை களத்திர ஸ்தானம்,பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் மீது விழுவதால் இந்த ஆண்டு திருமணம் நடைபெறும், திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும், சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் சத்தம் கேட்டும்.

   வீடு, மனை வாங்க யோகம்

   வீடு, மனை வாங்க யோகம்

   புரட்டாசி 18ஆம் தேதி அக்டோபர் மாதம் குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களுக்கு பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

   நன்மை தரும் ராகு கேது

   நன்மை தரும் ராகு கேது

   சுக ஸ்தானத்தில் கேதுவும் தொழில் ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர். தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. இந்த ஆண்டு மாசி மாதம் வரை தொழிலில் சற்றே ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தூக்கம் குறைபாடு சிலருக்கு இருக்கும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். மாசி மாதம் 01ஆம் தேதி ராகு பகவான் - தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் - சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுவதால் தாயார் உடல் நிலை சீராகும். வண்டி, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும்.

   எச்சரிக்கை தேவை

   எச்சரிக்கை தேவை

   மூன்றாமிடத்தில் சனி அமர்ந்திருக்கிறார். இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் அதிக வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிலையான வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் தொழிலோ, வேலையோ அமையும். சனி செவ்வாய் கூட்டணியில் புது ஆண்டு பிறப்பதால் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.

   மதிப்பு உயரும்

   மதிப்பு உயரும்

   கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

   திருவண்ணாமலை கிரிவலம்

   திருவண்ணாமலை கிரிவலம்

   இந்த ஆண்டு எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. சிலருக்கு தசாபுத்தி திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. விளம்பி புத்தாண்டில் மேலும் நன்மைகள் நடைபெற திருவண்ணாமலை சென்று பவுர்ணமி நாளில் கிரிவலம் வரலாம்.

   [மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   This article explains about the yearly horoscope for the Tamil new year Vilambi 2018 -19 prediction based on the moon sign Thulam Rasi.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more