விருச்சிகத்தில் கூட்டணி அமைத்த செவ்வாய் - சனி .. என்ன பாதிப்பு? பரிகாரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சென்னை: பெருமழையும், வெள்ளமும், நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. யுத்த கிரகம் என்று கூறப்படும் செவ்வாயும் அதற்கு பகை கிரகமான சனியும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது.

இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் வாகன விபத்துகள் தீ விபத்துகள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் பலத்த காற்றும் நல்ல மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

முக்கியமாக, 27.02.2016 to 09.09.2016 வரை உலகத்திற்கு நன்மை தரக் கூடிய காலகட்டம் இல்லை. இத்துடன் நில நடுக்கம், நெருப்பு, வாகன விபத்துகளும் கலவரங்களும் சண்டை சச்சரவுகளும் பெரும் உயிர் இழப்புகளும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

செவ்வாய், சனி சேர்க்கை

செவ்வாய், சனி சேர்க்கை

இப்படி ஒருவர் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் செவ்வாய்,சனி திசையோ புத்தியோ நடக்கும்போது மிகுந்த துயரினைஅவர்அடைவார். விபத்து, ஆபரேசன், சிறைவாசம், வீண் பழி, தீவிபத்து, உறவினர் அனைவரும் பகை அரசாங்க எதிர்ப்பு,பூமிதோசம்,சாபம் நிறைந்த நிலத்தை வாங்கி அவதிபடுவது,வாகனத்தால் கண்டம் என பட்டியல் நீள்கிறது.

உலகத்தில் பிரச்சினைகள்

உலகத்தில் பிரச்சினைகள்

கோட்சாரப்படி இப்படி சேர்ந்து இருக்கும்போது மேற்சொன்ன பிரச்சினைகள் உலகிலும் நடக்கும்தானே. அதிக மக்கள் கூடும் இடங்களில் கலவரம்,தீவிரவாதிகளால் ஆபத்து,ரயில்,விமான விபத்துகள், நாடுகளுக்குள் சண்டைகள்,தீவிபத்துகளை இந்த சேர்க்கை குறிக்கிறது. மார்ச் மாதம் 25ம் தேதி முதல் சனி வக்ரமாகும் சமயம் இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலம் வீடு போன்றவற்றில் பிரச்சினை நெருப்பு மின்சாரம் போன்றவற்றல் விபத்து உடன் பிறப்புகளிடையே சச்சரவுகள் என்பவை எல்லோருக்கும் உள்ள பொதுவான பலன்களாகும்

மேஷம்

மேஷம்

மேஷம் ராசியினருக்கு 8ல் செவ்வாய்-சனி இருக்கிறது. அஷ்டம சனி போதாது என இப்போது ராசி அதிபதியும் மறைகிறார்.. அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும்..ஆண்களுக்கு சிறு நீரக நோய் உண்டாகலாம் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை உண்டாகலாம் ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு 7ல் செவ்வாய்-சனி சேர்க்கை,வருவதால், திருமண பேச்சில் தடங்கல் உண்டாக்கும். கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. பணத்தட்டுப்பாடு அதிகம் காணப்படும்

ரிஷபம்

ரிஷபம்

ராசியினருக்கு 7ல் செவ்வாய்-சனி சேர்க்கை,வருவதால், திருமண பேச்சில் தடங்கல் உண்டாக்கும். கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. பணத்தட்டுப்பாடு அதிகம் காணப்படும்

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு 6ல் செவ்வாய்-சனி இருப்பதால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் கவனம் தேவை அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம்

கடகம் ராசியினருக்கு 5-ல் செவ்வாய்-சனி இருப்பதால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சினை உண்டாக்கும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கு 4-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.

கன்னி

கன்னி

கன்னி ராசியினருக்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. மாமனாருக்கு பாதிப்பு. அலைச்சல்,வாகனத்தால் பாதிப்பு,உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்யும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியினருக்கு செவ்வாய்-சனி 2ல் சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதையை உண்டாக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு செவ்வாய் சனி சேர்க்கையால்,கோபம் தலைக்கு ஏறும் ரத்த கொதிப்பு & டென்சன் அதிகமாகும் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சலை ஏற்படுத்தும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியினருக்கு 12ல் செவ்வாய்-சனி இணைவதால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் நீண்ட. தூர பயணத்தில் வெகு கவனம் தேவை. நிம்மதியான தூக்கம் இருக்காது. வாழ்க்கையில் ஒருவித சலிப்பை ஏற்படுத்தும்.

மகரம்

மகரம்

மகரம் ராசியினருக்கு 11-ல் செவ்வாய்-சனி இருப்பதால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசியினருக்கு 10ல் செவ்வாய்-சனி இருப்பதால் தொழில்துறையில் நிதானம் தேவை செய்யும். தொழிலில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும். அரசு உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது.

மீனம்

மீனம்

மீனம் ராசியினருக்கு 9-ல் செவ்வாய்-சனி இணைவதால் தந்தை - மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும்.சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிக்கல் இருக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும்.

என்ன பரிகாரம்

என்ன பரிகாரம்

இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்ய வேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் தோறும் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..செவ்வாய் ஓரையில் வழிபடுவது இன்னும் நல்லது. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றலாம். காலை மாலை விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால் தீமை குறையும்.

வாழ்நாள் முழுவதும் வணங்குங்கள்

வாழ்நாள் முழுவதும் வணங்குங்கள்

ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும். காலை மாலை விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால் தீமை குறையும், மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.

நவகிரக சன்னதியில் வழிபாடு

நவகிரக சன்னதியில் வழிபாடு

விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம்.சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் செவ்வாய்-சனிக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிபட்டால் துன்பம் விலகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+