ஹார்ட் அட்டாக் மரணம் யாருக்கு வரும் - ஜோதிட ரீதியான காரணங்கள்

ஜாதகத்தில் நான்காமிடம் இதை இதயஸ்தானம். தாய்க்கு உரிய இடம் இது. இந்த இடம் பாதிக்கப்பட்டிருந்தால் தாய் வீடு,வாகனம் ,கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். திடீர் ஹார்ட் அட்டாக்கும் வரலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரடைப்பு இன்றைக்கு இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது. இதய முடக்கம், மாரடைப்பினால் பலருக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இதய நோய்க்கு ஜாதக ரீதியாக ஏற்படும் காரணங்களை அறிந்து கொள்வோம். அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. உடல் எடை அதிகமாகிறது, கூடவே மன அழுத்தமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.

Who Heart Attack Death Comes astrological remedies

மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சூரியன்தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சூரியன் அல்லது சந்திரன் 4ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும். கடகம் சிம்மம் இந்த ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும்.

இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும்.

ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்,சனி சேர்ந்திருப்பது அல்லது செவ்வாய்ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொழுப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் மன அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது முருகன் வேல், தாமிரத்தில் டாலர் செய்து கழுத்தில் அணிய இதய நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+