For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உலக தூக்க தினம்: சுகமான தூக்கம் வரலையா? பரிகாரம் இருக்கு!

உறக்கத்திற்கும் நீண்டநாள் வாழ்வதற்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.தூக்கம் கெடுவதற்கு ஜோதிட ரீதியான காரணங்களை அறிந்து பரிகாரம் செய்யலாம்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: சுகமான தூக்கத்திற்கும் படுக்கை சுகத்திற்கும் காரகர் சுக்கிரன். சந்திரன், புதன், சுக்கிரன் கிரகங்கள் ஒருவரின் உறக்கத்தை தீர்மானிக்கிறது. உலக தூக்க தினமான இன்று தூக்கம் பாதிப்பு அதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்வோம்.

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. சிலருக்கு அதிகம் தூக்கம் வரும். சிலருக்கு தூக்கமே வராது. இது இரண்டுமே நல்லதல்ல. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடினமான உழைப்பு உழைத்துவிட்டு வந்தாலும் சிலருக்கு சாமான்யமாக தூக்கம் வராது. தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம். தூக்கமின்மை (Insomnia) குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

உலக தூக்க தினம்

உலக தூக்க தினம்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் மனிதர்களின் உறக்கம் பற்றிய ஆய்வு ஒன்றினை அறிந்து கொள்வோம்.

குழந்தைகள் தூக்கம்

குழந்தைகள் தூக்கம்

புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

4 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகள் தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

பள்ளி செல்லும் பிள்ளைகள்

பள்ளி செல்லும் பிள்ளைகள்

1 வயதில் இருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் .

3 வயதில் இருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை உறங்கலாம்.

உறக்கம் வர மறுப்பது ஏன்?

உறக்கம் வர மறுப்பது ஏன்?

நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்க்கு முக்கிய காரக கிரகமாகும்.

புதன் சந்திரன்

புதன் சந்திரன்

லக்னத்தில் மாந்தி, சந்திரனோடு மாந்தி, புதனோடு மாந்தி, சுக்கிரனோடு மாந்தி இவையெல்லாம் தூக்கத்தை சீரழிக்கும் கிரக சேர்க்கைகளாகும். ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும் நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.

படுக்கை சுகம்

படுக்கை சுகம்

தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். வாழ்க்கை துணையோ படுக்கை சுகம் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்கு குறைவிருக்காது.

முறையற்ற தூக்கம்

முறையற்ற தூக்கம்

தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதன், சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள்.

என்ன பரிகாரம் செய்வது

என்ன பரிகாரம் செய்வது

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை கெடுத்து விடுவார்கள். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிரன் தலமாகும். மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர், மாங்காடு காமாட்சியம்மனை வணங்கலாம். திருவெண்காடு, திருப்புளியங்குடி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். இங்கு சென்று இறைவனை தரிசிக்க தூக்கம் குறைபாடு நீங்கும்.

English summary
Sleep is the mechanism of mind to give relaxation to body and mind. To raise awareness about the importance of sleep for good health, March 16 marks World Sleep Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X