• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பாம்புகள் தினம் : நாக தோஷம் நீக்கும் நாக பஞ்சமி விரதம் - பாம்புகளை வணங்கினால் என்ன நன்மை

Google Oneindia Tamil News

சென்னை: பாம்பென்றால் படையும் நடுங்கும். பயம் காரணமாகவே பாம்புகளைப் பார்த்தாலே அடித்து கொள்கின்றனர். பாம்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக, உலகம் முழுவதும் ஜூலை 16ஆம் தேதி ஆண்டுதோறும் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாம்புகளால் ஏற்பட்ட தோஷம் நீங்கவே ஆடி மாதத்தில் நாக பஞ்சமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாம்புகளை வணங்கினால் தோஷங்கள் நீங்கி சுப காரியத்தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலகம் முழுவதும் விஷமுள்ள பாம்புகளிடம் கடிபட்டு சராசரியாக ஓராண்டுக்கு 1,38,000 பேர் உயிரிழப்பதாகவும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்னையாகவே இது நிலவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு தெரிவித்தது.

குளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகுளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பாம்பு கடி மரணங்களில் பாதிக்கும் அதிகமானவை இந்தியாவில்தான் நிகழ்ந்துள்ளன. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவெனில், இந்தியாவைவிட அதிகமான நச்சுப்பாம்புகளைக் கொண்ட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் இதைவிடக் குறைவான பாம்புக்கடி மரணங்கள் பதிவாகியுள்ளன.

பாம்புகள்

பாம்புகள்

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2019 வரைலான 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நிகழும் 95 சதவிகித பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணம் ராஜ நாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு பாம்புகள்தான்.

விஷ பாம்புகள்

விஷ பாம்புகள்

நாகப்பாம்புகள் இரவு நேரங்களில் உலவும்போது தவறுதலாக அவற்றை மிதித்துவிட்டால், தற்காப்பு கருதி அச்சத்தில் அவை கடிக்கின்றன. இதுபோன்ற விபத்துகளால்தான் அதிகமான பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுகின்றன. பாம்புக்கடிக்கு ஆளனவர்களில் பெரும்பான்மையானவர்கள், விவசாயிகளாகவே இருக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில்தான் இந்த விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. பாம்புக்கடி மரணங்களில் 94 சதவிகிதம் கிராமப்புறங்களைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட எளிய மக்களிடையேதான் நிகழ்ந்துள்ளது.

பாம்புகடி விஷங்கள்

பாம்புகடி விஷங்கள்

பாம்பு விஷத்தில் 2 வகை உண்டு. ஒன்று, நியூரோடாக்ஸின் என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம்உடலில் ஏறும். அரை மணி நேரத்தில் விஷ முறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரை காப்பாற்றிவிடலாம். மற்றொன்று, ஹீமோடாக்ஸின் என்ற விஷம். இது, ரத்தசெல்களைப் பாதித்து, ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப் பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும்.

முதலுதவி

முதலுதவி

பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்பு வைப்பது, கத்தியால் கீறிவிடுவது போன்றவை தவறான முதலுதவிகள். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருட்களையும் பூசக் கூடாது. பாம்பு கடிக்கு உள்ளானவரை படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவதே நல்லது.

சுப காரியத்தடைகள்

சுப காரியத்தடைகள்

உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இந்தியாவில் ஆடி மாதத்தில்தான் நாக பஞ்சமி, கருட பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. சிலர் பாம்புகளை பயத்தில் அடித்து கொன்று விடுவார்கள். பாம்புகளை கொன்ற தோஷம் பல ஆண்டுகள் தொடர்ந்து வரும். தலைமுறைக்கும் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். தோஷங்கள் நீங்கவும், பாம்புகளால் ஏற்பட்ட சாபம் நீங்கவும் நாக பஞ்சமி, கருட பஞ்சமி நாளில் பாம்புகளை வழிபடுகின்றனர். நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணத்தடை, புத்திரபாக்கியத்தடை நீங்கும்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்திற்குள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

நோய்கள் நீங்கும்

நோய்கள் நீங்கும்

நாக தோஷம் நீங்குவதற்கும், பக்ஷி தோஷங்கள் அகலவும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டியும், பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும் நாக பஞ்சமி நாளில் விரதம் இருந்து பாம்புகளை வணங்கலாம்.

English summary
World Snake Day is celebrated annually on July 16 around the world to raise awareness about snakes.They beat snakes because they are afraid.Naga Panchami Day is observed in the month of August to cure the ailments caused by snakes. It is believed that worshiping snakes removes imperfections and removes auspicious obstacles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X