புத்தாண்டு ராசி பலன் 2024: இந்த 6 ராசிக்காரர்கள் குறி வச்சா 2024ல் நிச்சயம் இரை விழும்
சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. படிக்கவும், வேலைக்காவும் வெளிநாடு செல்ல பலர் விரும்புவார்கள். பிறக்கப்போகும் புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப்போகிறார்கள். வைத்த குறி தப்பாமல் 2024ல் சொல்லி அடிக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.
வெளிநாடு செல்லும் யோகம்: சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். பிறக்கப்போகும் புத்தாண்டில் சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அயல்நாடு வியாபாரம் கைகூடி வரும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளை பெற முடியும். விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு வேலை வாய்ப்பு கைகூடி வரப்போகிறது.
மிதுனம்: புத்திசாலியான புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே... வரப்போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். வெளிநாடு வேலைக்காக செய்யும் முயற்சி வெற்றிகரமாக கைகூடி வரும்.
கடகம்: சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே இருக்க போகின்றது. தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். சனி பகவான் சாதகமாக இல்லை என்றாலும் குரு பகவானும் ராகு கேதுவும் உங்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகின்றனர்.
சிம்மம்: சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக 2024ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருபகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் பேரும் புகழும் கிடைக்கும். உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உடாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் காலமாகும்.
கன்னி: அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக உள்ளது. எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள். மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குரு பகவானின் பார்வை கிடைப்பதால் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். உங்கள் குறி இந்த ஆண்டு தப்பவே தப்பாது உங்களுக்கு 2024ஆம் ஆண்டு பண மழை பொழியப்போகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications