For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாளய பட்சம் திருச்சி அம்மா மண்டபத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்சி அம்மா மண்டபத்தில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்றைய தினம் திருச்சி அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அம்மா மண்டபம் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐந்து மாதங்களுக்கு பிறகு அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவில்கள் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

People who gave Tarpanam after 5 months in Mahalaya Paksam Trichy Amma Mandapam

தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அம்மா மண்டபம் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐந்து மாதங்களுக்கு பிறகு அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தா்கள் உடல் வெப்ப நிலை சோதித்து, கிருமி நாசினி அளித்து தனி மனித இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா்.

9 வண்ணங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கபட்டனா். மேலும் கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் முகக்கவசம் அணிந்திருந்தனா். காலை 6.30 முதல் மாலை 7.30 மணி வரை பக்தா்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்று வர அனுமதிக்கப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பொது முடக்கத்துக்குப் பிறகு பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனா். செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை சிவாச்சாரியா்கள் செய்தனா். பின்னா் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

இதுபோல் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில்களில் தினசரி நடைபெறும் இரண்டு கால பூஜைகள் நேற்று காலை வழக்கம் போல தொடங்கியது. இந்த பூஜையில் பக்தர்கள் கட்டுப்பாடுடன் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் தினசரி நடைபெறும் ஆறுகால பூஜைகள் நேற்று வழக்கம் போல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

மகாளய பட்ச நாட்களில் கர்ணன் செய்த அன்னதானம் - புராண கதைமகாளய பட்ச நாட்களில் கர்ணன் செய்த அன்னதானம் - புராண கதை

திருச்சி அம்மா மண்டபம் காவிரிக் கரையில் இறந்தவா்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தவும், முன்னோர்களுக்கு தா்ப்பணம், திதி வழங்கவும் தினந்தோறும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மா மண்டபத்துக்கு வருகை தருவா். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் அம்மா மண்டபமும் மூடப்பட்டது. மேலும், காவிரிக் கரையில் இறுதிச் சடங்குகள் நடத்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், அம்மா மண்டபம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக எந்தவித சடங்குகளும் நடைபெறவில்லை.

இதன்படி, அம்மா மண்டபத்தில் இறுதி சடங்குகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புரோகிதா்கள் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் அமா்ந்திருந்தனா். தா்ப்பணம், இறுதி சடங்குகளுக்கு வந்திருந்த பொதுமக்களும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமா்ந்து தங்களது குடும்ப உறுப்பினா்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வழிபட்டனா். காவிரியில் தா்ப்பணம் அளித்து முன்னோர்களுக்கு நோ்த்திக் கடனையும் செலுத்தினா். இதன்காரணமாக அம்மா மண்டபம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்களும், புரோகிதர்களும் முக கவசம் அணிந்திருந்தனர். காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவித்தும் வருகின்றனர்.

English summary
All temples in Tamil Nadu have been reopened as lockdown relaxations have been announced. Srirangam Ranganathar Temple in Trichy, Amma Mandapam has been opened and many devotees visited it. Five months later a large number of people in the Amma Mandapam paid homage to their ancestors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X