Purattasi matha palan: கடக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. ரகசியம் காப்பது நல்லது

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

purattasi-maatha-palan-what-kind-of-benefits-and-fortunes-will-get-kadagam-rasi-people-in-this-mont

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு ராசி, லக்கினத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கும் வரை பணம், காசுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்திருப்பீர்கள். சந்தோஷம், சுகம் காணப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு வசீகரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்திருப்பீர்கள். இந்த மாதத்தில் சுக்கிரனும், கேதுவும் இணைவது நல்ல விஷயம் கிடையாது.

உடல்நிலையில் கவனம்

மனைவியின் உடல்நலனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு மறைமுகமான பிரச்சனைகளும் வரும். 3 ஆம் இடம் என்பது உபஜெய ஸ்தானம். இதனால், கழுத்து, எழும்பு போன்ற இடங்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு இடத்தில் உங்கள் பெயர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

பணம் வந்து சேரும்

வர வேண்டிய பாக்கிகள், பணங்கள் வந்து சேரும். முக்கிய டாக்குமென்டுகள், ஆர்டர்கள், மெமோக்கள் போன்றவை வரும் வாய்ப்புள்ளது. பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். கால் முட்டி, கால்கள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சொத்துகளால் பிரச்சனை

பூர்வீக சொத்துகள், பிரச்சனை தொடர்பான பிரச்சனைகள் அமர்ந்து பேசினாலும் இந்த மாதத்தில் முடிவது கொஞ்சம் கடினம்தான். அவ்வளவு எளிமையாக உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நடக்காது. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மனது ஒருவிதமான சஞ்சலத்துடனேயே இருக்கும். என்ன செய்வது என்று தெரியாத நிலைமையில் இருப்பீர்கள். மறைமுகமாக குரு அமர்ந்திருப்பது அஜீரண கோளாறுகளால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரகசியம் காப்பது நல்லது

ரகசியத்தை ரகசியமாக செய்வது 100க்கு 100 கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். சீக்ரெட்டை வெளியில் சொன்னீர்கள் என்றால் கட்டாயமாக அது நடக்காது. நல்லது செய்ய போய் பிரச்சனையில் சிக்கும் வாய்ப்புள்ளது. யாருக்கு உதவி செய்யப் போனாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும். பொய் சொல்லி உங்களிடம் பணத்தை வாங்குவார்கள்.

வழிபாடு

குறிப்பாக, இளைய சகோதரர்கள், சகோதரிகளால் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதனால், குடும்பத்துக்குள் பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். தினந்தோறும் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. அதிகளவில் வேலை செய்தால் கழுத்து பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+