Purattasi Matha Palan: தொட்டது துலங்கும்.. மிதுன ராசிக்கு புரட்டாசி மாதம் தரும் அதிர்ஷ்ட பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், அதிர்ஷ்டங்கள், வேலை, தொழில் வாய்ப்பு, திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்.

purattasi-matha-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-during-this-month

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

எனவே, புரட்டாசி மாதத்தில் பெரிய தலைவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அதிபர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ராணுவத் தளபதிகள், காவல் துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் தாங்கள் செல்லும் வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. விமானம், ஹெலிகாப்டரில் செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு ஆரோக்கியத்திலும், உறவுகள் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருப்பது நன்மையைத் தரும். பழைய கடன்களை எல்லாம் திட்டமிட்டு அடைத்து முடிப்பீர்கள். மன அழுத்தம் தீரும். மரண பயம் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சந்தோஷம் ஏற்படும்.

தொழில் தொடங்கும் யோகம்

புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்றம் ஏற்படும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். யோக பலன்கள் அதிகரிக்கக் கூடிய நல்ல காலம். தனிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். சுவாசக் கோளாறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தம் தொடர்பான தொற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, அலர்ஜி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். சேமிப்பு, முதலீடு விஷயத்தில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

வழிபாடு

அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருக்கும் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாம் பனிபோல விலகச் செய்யும். வியாழக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். விரயங்கள் அதிகமாக இருப்பதால் ஏழைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவளிப்பது நன்மையைத் தரும். பெருமாள் வழிபாடு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+