Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Purattasi Matha Palan: கடக ராசி திடீர் பண வரவால் திக்குமுக்காட போறீங்க.. சூப்பர் மாற்றம் வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

purattasi-month-2025-kadagam-rasi-people-will-get-good-benefits-and-fortunes-during-this-purattasi

பண்டிகைகள்

பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

இந்த புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த சூரியன் உங்களை டென்சனாக, கடுகடுவென வைத்திருக்கும். தற்போது 3 ஆம் இடத்தில் அமருவதால் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பீர்கள். கோபதாபம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எல்லா விதமான நல்ல விஷயங்களும் இந்த புரட்டாசி மாதத்தில் நடக்கும்.

மகிழ்ச்சி

மனதுக்குள் இருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். முக்கியமான முடிவுகளை உடனடியாக எடுப்பீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். சூரியன் பலமாக இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றிகரமாக முடியும். வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கான லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

திடீர் பண வரவு

புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். உங்களுடைய ராசிக்கு ஆதரவாக சுக்கிரன் அமர்ந்துள்ளதால் திடீர் பண வரவுகள் உண்டாகும். பழைய இடங்களைக் கொடுத்துவிட்டு புதிய இடங்களை வாங்குவீர்கள். வியாபாரம் இந்த மாதம் முழுக்க அமோகமாக இருக்கும். புதிய சரக்குகளை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.

சிக்கல்கள் நீங்கும்

உத்தியோகத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். சின்ன சின்ன பதவி உயர்வு, சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. 2 ஆம் இடத்தில் கேது அமர்ந்துள்ளதால் எல்லா விஷயங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. 9 ஆம் வீட்டில் சனி பகவான் அமர்ந்துள்ளதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இந்த மாதம் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

வழிபாடு

இந்த புரட்டாசி மாதத்தில் அனைத்து நன்மைகளும் வேகமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். மேலும், நல்ல பலன்கள் கிடைக்க ஸ்ரீ காஞ்சி காமாட்சியை வழிபடுவது நல்லது. கால்களை இழந்து நடக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவுவது நன்மை பயக்கும். உளுந்தம்பருப்பு தானமாகக் கொடுப்பது மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+