Purattasi: புரட்டாசி மாதம் உஷார்! இந்த 3 ராசிகளுக்கு மட்டும் கூடுதல் கவனம் தேவை

Subscribe to Oneindia Tamil

Purattasi Matha Palan: ஆவணி மாதம் முடிவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. கன்னி ராசிக்குள் சூரியன் வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளுக்கு அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப மாற்றங்களையும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அசுப மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கன்னி ராசிக்குள் சூரிய பகவான் சஞ்சாரம் செய்துள்ளார்.

purattasi-month-horoscope-3-zodiac-signs-that-need-to-be-extra-careful

கன்னி ராசிக்குள் சூரியன் வரும் இந்த மாதமே கன்னி மாதம் என்றும், புரட்டாசி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. புதன் தான் கன்னி ராசிக்கு அதிபதி. சூரியன் புதன் வீட்டிற்கு வந்தாலும் கன்னி பகை வீடாகும். மீனத்தில் உள்ள சனியும், கன்னியில் உள்ள சூரியனும் சமசப்தம பார்வையாக உள்ளது.

அந்த வகையில், புரட்டாசி 1 முதல் 30 ஆம் தேதி (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17) வரையிலான தமிழ் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம் ராசி

மகரம் ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் நீச்சமாகியும், குரு உச்சமாகவும் இருப்பதால் குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. உறவுகளுக்கும், உங்களுக்கும் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால், அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். குரு பார்வையில் இருப்பதால் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆக்ரோஷப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. யார் என்ன சொன்னாலும் மன அழுத்தத்திற்கு ஆளாவது, மன வருத்தப்படுவது, அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது, அவர்களுடைய நட்பு போய்விடுமான என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நட்பு, உறவு எந்த உறவாக இருந்தாலும் கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள், நீங்களாகவே தூய மனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். சனி விலகி இருப்பதாலும், சனி 3 ஆம் இடத்தில் அமர்ந்து சூரியப் பார்வையில் படுவதாலும் உங்களுக்கு அற்புதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் தாயார் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

கும்பம் ராசி

கும்பம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் அதீத கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம். இருசக்கர வாகனம், சைக்கிள், கார் என பயணங்கள் மேற்கொள்வோர், தொலைதூரப் பயணம் மேற்கொள்வோருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அநாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். நல்ல தூக்கத்திற்கான பயிற்சி, உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

கோபம், கத்துவது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. குறுகிய வட்டத்துக்குள் இருப்பது இந்த மாதத்தில் நன்மையைத் தரும். அஷ்டமத்தில் இருக்கும் சூரியன் 2 ஆம் இடத்தில் இருக்கும் சனியைப் பார்ப்பதாலும், பகை வீட்டில் இருந்து சூரியன் பார்ப்பதாலும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனம் தேவை. உங்களுடை பேச்சு உங்களுக்கு எதிராகவே திரும்பும் அமைப்பு உள்ளது.

சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பழைய நோய்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. பண வரவுக்கு குறைவு இருக்காது. தொழிலில் அதீத நன்மைகள் ஏற்படும். அதீத கெளரவம் பார்க்காமல் இருப்பது நல்லது. புதன்கிழமைகளில் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு புரட்டாசி மாதம் அற்புதமாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, தலைவலி, நரம்பு, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்த்து நிதானமாக செயல்பட வேண்டும். நிறைய நன்மைகள் ஏற்படும். சனிக்கிழமைகளில் பிள்ளையார், பெருமாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள், யார் நல்லவர், கெட்டவர் என்ற தன்மை, பதட்டம் போன்றவை குறையும். சந்தோஷமான இடங்களுக்குச் செல்வீர்கள். தெய்வ காரியங்களுக்குச் செல்வீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.

இழுபறியாக இருந்த சங்கடங்கள் தீரும். பயணங்கள் அனுகூலத்தைத் தரும். துணையிடம் சிறு சிறு மனக் கசப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உள்ளூர், வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நிறைய பொருள் சேர்க்கை உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+