லாட்டரி யோகம் முதல் வெளிநாட்டு பயணம் வரை.. விருச்சிக ராசிக்கு ராகு கேது தரும் மெகா அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

rahu-ketu-peyarchi-2026-rahu-ketu-peyarchi-predictions-for-viruchigam-rasi-scorpio

கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு 4 ஆம் இடத்தில் இருந்த ராகு 3 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். 10 ஆம் இடத்தில் இருந்து கேது 9 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். பஞ்சவடி அனுமன் சேஷ்திரத்தில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அனுமனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தினந்தோறும் அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது யோகத்தைத் தரும்.

பிரச்சனைகள் வரும்

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. வயிறு, அசிடிட்டி, எதுக்களிப்பது, தொண்டை வலி போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உடனிருக்கும் வேலை ஆட்கள், பார்ட்னர்களால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

கவனம்

அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மன நிம்மதியைத் தரும். கஷ்டங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். பயணங்களில், அண்டை அயலார் வீட்டு விஷயங்கள், புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் என நல்ல மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டம்.

திடீர் அதிர்ஷ்டம்

வெளியூர், வெளிநாடு, கடல் கடந்து பயணம் செய்யக்கூடிய யோகம் ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது, குடும்பத்தினருடன் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கண்டிப்பாக செல்லலாம். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். அதிர்ஷ்டமான அமைப்பு உள்ளது.

லாட்டரி யோகம்

லாட்டரி போன்றவற்றில் யோகம் கிடைக்கக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மன வருத்தத்தில் இருந்து வெளியில் வரக்கூடிய யோகம். எவை நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். ஏற்றுக் கொள்ளலாம என்கிற எண்ணம் தோன்றும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+