கடக ராசிக்குள் வரும் ராகு.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. இந்த விஷங்களில் உஷார்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம்.ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

rahu-ketu-peyarchi-2026-rahu-ketu-transit-predictions-for-kadagam-rasi-cancer

கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியினருக்கு 8 ஆம் இடத்தில் இருந்த ராகு 7 ஆம் இடத்துக்கும், 2 ஆம் இடத்தில் இருந்த கேது 1 ஆம் இடத்துக்கும் வருகிறார். கடக ராசிக்குத்தான் ராகு பெயர்ச்சியாகிறார் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பட்டீஸ்வரம் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

எச்சரிக்கை

மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியம்

ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, வெர்டிகோ போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வண்டிகளில் செல்லும்போது சீட் பெட் கொள்வது நல்லது. ஹெல்மெட் போடுவது, குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குவது நன்மை பயக்கும். வாகனங்களில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது.

வழிபாடு

திருமண உறவில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பட்டீஸ்வரம சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். 38 எலுமிச்சம்பழங்களை கொடுத்து வழிபாடு செய்து, அதில் 5 ஐ மட்டும் வாங்கி வந்து பழச்சாறு செய்து அருந்துவது நல்லது.

பரிகாரம்

நல்லெண்ணெய், குங்குமம், திருநீறு வைத்து துர்க்கை அம்மனுக்கு தினந்தோறும் தீபமேற்றி வழிபாடு செய்வது வெற்றி மீது வெற்றியைத் தரும். கோளார் பதிகத்தை தினந்தோறும் படிப்பது, கேட்பது மேன்மையைத் தரும். தூக்கம் அதிகம் கெடக்கூடும் அமைப்பு. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

கவனம்

கணவன், மனைவிக்குள் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். காதல் அமைப்பில் மிகுந்த கவனம் தேவை. எதிர்பாலினத்தவர் விஷயத்தில் கவனத்துடன் செயல்படுவது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+