ராகு கேது பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 8 ராசிகள்.. திருப்பாம்புரம் கோயிலில் என்ன பரிகாரம் செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ராகு கேது பெயர்ச்சி வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள புகழ்பெற்ற சேஷபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு ராகு கேது தோஷ பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன. இந்தப் பூஜைகளுக்கான கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ராகு கேது ஸ்தலமான சேஷபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் இந்தியாவில் அமைந்துள்ள மிக பழமையான திருக்கோயிலாகும். இத்தலம் 274 தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று ஆகும். ஸ்ரீசேஷபுரீஸ்வரர் அம்பாள் ஸ்ரீ வண்டுசேர் பூங்குழலி, ஸ்ரீ ராகுவும் - கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் ராகு கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

Rahu ketu peyarchi

இத்தலத்திற்கு பாம்புபுரம் மற்றும் தென் காளகஸ்தி என்ற பெயர்களும் உண்டு. இத்தலத்தை வழிபடுவதால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தி ஆகிய ஐந்து திருத்தலங்களை வழிபட்ட ஒருமித்த பலன் உண்டு. இக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (நவம்பர் 13) வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

பரிகார பூஜைகள்

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 8 ராசிகளாகும். ராகு - கேது பால் அபிஷேகத்திற்கு 1 நபருக்கு ரூ. 50, லட்சார்ச்சனை 1 நபருக்கு 100, ராகு - கேது தோஷ பரிகார ஹோம கட்டணம் 1 நபருக்கு
ரூ. 500, சிறப்பு ராகு - கேது தோஷ பரிகார பூஜை 1 நபருக்கு ரூ. 500, ராகு - கேது பெயர்ச்சி கட்டளை அர்ச்சனை 18 மாதங்கள் ரூ. 1800, ராகு-கேது அபிஷேகம் பக்தர்கள் குறிப்பிடும் நாளில் முன்பதிவிற்கு உட்பட்டு ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொகையை பணவிடை அல்லது வரைவோலை மூலமாகவோ, அல்லது INDIAN BANK, Nakkambadi Branch A/c. No. 6050908509, ifsc code IDIB000N105 செலுத்தி உரிய ரசீதினை திருக்கோயில் முகவரிக்கு விவரத்துடன் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோஷ நிவர்த்தி பூஜைகள்

ஜாதகத்தில் கால சர்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2-ல் இராகுவோ-கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ - இராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி இருந்தால், களத்திர தோஷம் இருந்தால், புத்திர தோஷம் இருந்தால், ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் தடைபட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வருதல், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு கோயில் நிர்வாகத்தை 8754756418 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+