ராகு கேது பெயர்ச்சி: தனுசு ராசிக்கு மொத்த கஷ்டமும் தீரப்போகுது.. ஒரு விஷயத்துல மட்டும் கவனம்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது தனுசு ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பது சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனியின் வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மூன்றாம் இடத்துக்கும், கேது பகவான் ஒன்பதாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். கடந்த காலங்களில் இழந்ததை திருப்பி கொடுக்கும் நல்ல பெயர்ச்சியாக ராகு கேது பெயர்ச்சி இருக்கும். தெளிவாக திட்டமிட்டு, சுறுசுறுப்புடன் பணியாற்றினால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்துக்கு செல்வீர்கள்.
முன்னேற்றம்
கடுமையான உழைப்புக்கும், தீவிர முயற்சிக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ராகு பகவான் நான்காம் இடத்தில் இருந்த காரணத்தால் வீடு, வேலை, தொழில், குடும்பம், வண்டி என அனைத்திலும் பிரச்னைகள் அணி வகுத்திருக்கும். வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கும்.
வெற்றி
தற்போது ராகு மூன்றாம் இடமான உப ஜெய ஸ்தானத்துக்கும், கேது பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கும் வருவது சிறப்பான அமைப்பு. இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி குவியும். ராகு 1,5,9 ஆகிய இடங்களை பார்ப்பார். உத்யோகம், வீடு ஆகியவற்றில் எதிர்பார்த்த இட மாற்றம் நிச்சயம் உண்டு. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
புகழ்
இளைய சகோதரரிடம் இருந்த பிரச்னைகள் நீங்கி ஆதாயம் கிடைக்கும். சொத்துகளில் இருந்த சட்ட சிக்கல் பிரச்னை விலகும். உங்களின் அருமையான தகவல் தொடர்பால் சமூகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்த வந்த பிரச்னைகள் நிவர்த்தியாகும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது சரியான காலம்.
குடும்பம்
நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவீர்கள். பழைய சொத்துகளை விற்று புதிய சொத்துகள் வாங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் இணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்,
பயணம்
சுப காரிய தடைகள் விலகும். திருமண தடையால் அவதிப்படுவோருக்கு தற்போதிருந்து நல்ல தகவல்கள் கிடைக்க தொடங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளும் கைக்கூடும். பயணங்கள் அதிகரிக்கும் பயணங்களால் ஆதாயம் உண்டு.
பரிகாரம்
சோர்வை குறைத்துக் கொள்ளுங்கள். ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதால் பேராசையை தூண்டி வீண் விரயத்தை கொடுக்கும். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை தினத்தில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கும், வியாழக்கிழமை ஶ்ரீராமர் கோயிலுக்கும் சென்று வழிபடுவது, உக்கிர தெய்வங்களை வழிபடுவது உயரத்தை கொடுக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications