ராகு கேது பெயர்ச்சி: மீனம் ராசிக்கு சூப்பர் யோகம்.. நிஜமாவே உங்களுக்குத் தான்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது மீனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் 12 ஆம் இடத்துக்கும், கேது பகவான் ஆறாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். ஜென்மத்தில் இருந்து ராகு விலகுவது சிறப்பான பலன். இதுநாள் வரை மன உளைச்சால் தூக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஓய்வு, தூக்கம் கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறையும். வீண் விரயம் சுப விரயங்களாக மாறும்.
சொத்து
அடுத்தடுத்து சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கடன் சுமை குறையும். உங்களிடம் ஏற்கனவே உள்ள சொத்தை விற்று கடனை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சீராக இருக்கும்.
பகை
கேது ஏழாம் இடத்தில் இருந்து வாழ்க்கை துணை, தொழில் ஆகியவற்றில் பிரச்னைகளை ஏற்படுத்தியிருப்பார். அங்கிருந்து கேது விலகியதும் நல்ல பலன் தான். அவர் அங்கிருந்து ஆறாம் இடமான ஜெய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். பகை உடையும். எதிரிகள் அமைதியாவார்கள். கல்வி, உத்யோகம் தொடர்பாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
வருமானம்
உத்யோகத்தில் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. புதிய முயற்சிகள் மூலம் கூடுதல் வருமானங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகி அன்யோன்யம் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பிரிந்த உறவுகள் இணைவார்கள். தாய், தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
பெருமை
வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான பல நல்ல பலன்களும், அனுபவங்களும் கிடைக்கும் காலம் இது. குழந்தைகளால் நல்ல பலன்கள் உண்டு. குழந்தைகளின் கல்வி, வேலை வேலை வாய்ப்பில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் விருதுகள், அங்கீகாரங்களால் பெருமை சேர்ப்பார்கள்.
கவனம்
ஜென்ம சனி நடைபெற்று வருகிறது. குருப்பெயர்ச்சியும் சுமாராக உள்ளது. எனவே எதிலும் நன்கு சிந்தித்து இறங்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பேராசை தூண்டப்பட்டு பணம் முடக்கப்படும். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். உறவுகளிடம் அணுசரித்து செல்ல வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்
வார்த்தைகளில் கவனம் வேண்டும். இல்லையென்றால் உறவுகளை இழக்க நேரிடும். மலை மீதுள்ள முருகர், நரசிம்மர் வழிபாடு, பைரவர், காளி, வாரகி, துர்கை, பிரத்யங்கரா உள்ளிட்ட உக்கிர தெய்வங்களின் வழிபாடு தடைகளை நொறுக்கி நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications