For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோ முதல் தமிழருவி மணியன் வரை ரஜினிக்கு ஒத்து வராத ஆலோசகர்கள்- எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்

ரஜினிக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் ஒத்து வராமல் போனது கூட்டு எண்தான் என்கிறார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன். ரஜினிக்கு அரசியல் ஆலோசனை சொன்ன சோ, தற்போதைய ஆலோசகர் தமிழருவி மணியன் ஆகியோரின் பெயர் எண

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் இதோ வந்து விடுவார் என்று பலரும் சொல்லி வந்த நிலையில் ரஜினிகாந்த் சினிமாவில் சாதித்தது போல அரசியலில் சாதிக்க மாட்டார், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று அடித்துச்சொன்னார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன். இதை நமது ஒன் இந்தியா இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். சொன்னது போலவே, ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை வந்தாலும் முதல்வர் ஆக மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்போது ரஜினியின் முந்தைய அரசியல் ஆலோசகர் மறைந்த சோ பற்றியும் தற்போதைய ஆலோசகர் தமிழருவி மணியனுக்கும் இடையேயான பெயரியல் எண் கூட்டுத்தொகை ஒத்துவரவே வராது என்கிறார் ஜெஎன்எஸ் செல்வன்.

Recommended Video

    சோ முதல் தமிழருவி மணியன் வரை ரஜினிக்கு ஒத்து வராத ஆலோசகர்கள்- எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்

    நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அவர் மீண்டும் அளித்துள்ள பேட்டியில், ரஜினிக்கும் ஆறாம் எண்ணுக்கும் ஒத்து வராது. அவருடைய பல படங்கள் தோல்விக்கு காரணம் 6 ஆம் எண்ணில் வெளியிட்டதுதான். தர்பார் படம் கூட எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறாமல் போனதற்குக் காரணம் 6ஆம் எண்ணில் அமைந்ததுதான் என்று கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்தை தொடங்குவார், அவரது கட்சியில் இணைந்து நாமும் எம்எல்ஏ, அமைச்சர்கள் ஆகலாம் என்று பலரும் கனவு கண்டு கொண்டிருந்தனர். அந்த கனவு வெறும் கனவாகவே போய்விட்டது ரஜினி ரசிகர்களுக்கு. செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த், தான் முதல்வர் ஆகப்போவதில்லை. கட்சி வேறு ஆட்சி வேறு என்று கூறிவிட்டு நடையை கட்டிவிட்டார்

    ரஜினியின் ஆலோசகர்கள்

    ரஜினியின் ஆலோசகர்கள்

    அரசியல் அரிச்சுவடியே தெரியலையோ, கட்சி ஆரம்பிப்பது ஆட்சிக்கு வரத்தானே யார் இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்று பலரும் பேசி வருகின்றன. ரஜினிக்கு பல அரசியல் ஆலோசகர்கள் இருந்தாலும் சோ, தமிழருவி மணியன் ஆகியோர்தான் அரசியலில் ஆலோசனை கூறுவதில் முக்கியமானவர்கள். இவர்கள் கூறும் ஆலோசனை ரஜினிக்கு ஒத்து வராது என்கிறார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

    தமிழருவி மணியன்

    தமிழருவி மணியன்

    ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. முந்தைய அரசியல் ஆலோசகர் சோ.எஸ். ராமசாமி. சுருக்கமாக சோ. இந்த பெயரின் கூட்டுத்தொகை cho - 6. அதேபோல தற்போதைய அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் பிறந்த ஆண்டின் கூட்டுத்தொகை 6. இணக்கமற்ற எண்.
    ரஜினியின் வீட்டு எண் 18 ல் இருக்கிறது.

    போயஸ்கார்டன்

    போயஸ்கார்டன்

    ரஜினியின் விருப்பம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை. தொண்டர்கள்தான் அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். ரஜினியின் விருப்பம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதை மட்டுமே செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ரஜினியின் வீட்டு எண் 18. கூட்டுத்தொகை 9 இது பிரபலமான எண் மட்டுமல்ல பிரச்சினைக்கு உரிய எண். இங்கிருந்து எடுக்கும் முடிவுகள் எதுவுமே சரியா வராது.

    செவ்வாய் ஆதிக்க எண்

    செவ்வாய் ஆதிக்க எண்

    மும்பை, காஷ்மீர், பெய்ஜிங்,மியான்மர் போன்ற பல உதாரணங்களை சொல்லலாம். போராட்டகளமாக இருக்கிறது. ரஜினியின் வீட்டு எண் 18ஆம் எண்ணில் இருக்கிறது எனவேதான் ரஜினி பேசுவதும் எடுக்கும் முடிவுகளும் பிரச்சினைதான் இருக்கிறது. போயஸ்கார்டனில் இருந்து 30 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சிய முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு எண் 81 வேதாநிலையம் எத்தகைய போராட்டங்களை சந்தித்தது என்பது தெரியும்.
    நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சாதகமான எண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும் அதன்பிறகுதான் அவர் வெற்றியை ருசிக்க முடியும் என்கிறார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

    English summary
    Numerologist JNS Chelvan has predicted Actor Rajinikanth will not come to politics. JNS Chelvan said that the number between Rajini's former political advisor, late Cho, and current advisor Thamilruvi Maniyan cannot be matched.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X