மிதுன ராசி பலன்: அக்.12 முதல் 18 வரை அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் வாரம்.. என்னென்ன யோகங்கள்?
Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுன ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் உள்ளது. புதிய முயற்சிகளில் ஜெயிக்கும் அமைப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அரசியல் சம்பந்தப்பட்ட தொடர்புகள் உண்டாகும். நல்ல பேச்சுவாரத்தைகள் ஏற்படும். மத்திய அரசு வேலை கிடைக்கும் அமைப்பு உள்ளது. பஞ்சம ஸ்தானம் அருமையாக இருப்பதால் எல்லா காரியங்களையும் தீர்க்கமாக நின்று வெற்றி பெறுவீர்கள்.
பயணங்கள்
5 ஆம் இடம் நன்றாக இருப்பதால் நின்று ஜெயிக்கும் அமைப்பு. புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது பெரிய யோகத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மனைவி ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். மாதவிடாய் பிரச்சனை, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை போன்றவை ஏற்படும். தூர தேச பயணங்கள், வெளியூர் பயணங்கள் ஏற்படும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
மன அழுத்தம் தீரும்
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. விரயங்கள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் தீரும். இதுவரை இருந்து வந்த மரண பயங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
முன்னேற்றம்
இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டு. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். யோக பலத்தை பெற்றுத் தரும் காலகட்டம். இயற்கையாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும்.
வழிபாடு
ஐப்பசி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். அசிடிட்டி, காது, மூக்கு, தொண்டை, பல் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
