விருச்சிக ராசிக்கு இந்த வாரம் ஜாக்பாட்.. வேலை, தொழிலில் அதிரடி மாற்றம்.. தேடி வரும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Viruchigam rasi palan lucky zodiac signs

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். யோகம், அனுகூலம் காணப்படும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காணப்படும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

சுக்கிரன் புதன் அருள்

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். விரயத்தில் சுக்கிரனும் புதனும் இருப்பதால் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வழக்குகள் நிவர்தியாகும்.

பாதிப்புகள் நீங்கும்

வண்டி வாகனங்கள் யோகம் ஏற்படும். பொறுப்புகள் தானாகத் தேடி வரும். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை செய்து முடிப்பீர்கள். யோகமாக பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பொறுமையாக எந்த விஷயத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் சூரியன் இருந்து பெரிய பாதிப்புகளை இதுவரை தந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும்.

முயற்சிகளில் வெற்றி

பெரியவர்கள் மூலமாக பிரச்சனைகள், சண்டைகள், வாக்குவாதம், டென்ஷன் எல்லாம் நீங்கும் அமைப்பு உள்ளது. முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறக்கூடிய பாக்கியம் உண்டு. எந்த காரியத்தை செய்தாலும் அதை எளிமையாக முடிப்பீர்கள். தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். ராமபிரான் வழிபாடு பெரிய ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் தரும்.

வழிபாடு

திங்கள்கிழமை தோறும் சிவன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அடிவயிறு, கழிவுப்பாதை, உணவுக்குழாய், அசிடிட்டி, வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பசு மாடுகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். இருப்பினும், வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது சுப விரய பிராப்தத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+