பணக்கார யோகம் பெறும் மீன ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடப் போறீங்க
Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.
அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் கிரகங்கள் சேருகின்றன. நீச்சம் பெறக்கூடிய சூரியனால் பின்புறப் பகுதியில் வலி, வயிறு சார்ந்த பாதிப்புகள், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவுக்கும், உங்களுக்கும் பிரச்சனை வரும் அமைப்பு உள்ளது. அல்லது பிள்ளைகள் நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளாத தன்மைகள் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
மற்றவர்கள் மூலமாக சிறு சிறு அழுத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வராத பணம், பாக்கிகள், பார்ட்னர்ஷிப் போன்றவை வரக்கூடிய அமைப்பு உள்ளது. வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகு விரயத்தில் இருந்து கிளம்பி செல்வதால எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அவற்றை அவசரமின்றி செய்வது நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பாதிப்புகள், சிறுநீரகப் பிரச்சனைகள், முதுகு வலியில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நன்மை பயக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபத்தை தவிர்க்க வேண்டும். இயற்கையாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் சிறு சிறு தடங்கல்கள் காணப்படும்.
திடீர் அதிர்ஷ்டம்
எல்லாவிதமான சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் அனைத்தும் நன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தினந்தோறும் உடற்பயிற்சியை மறக்காமல் செய்வது, அனுமன் வழிபாடு செய்வது பலத்தைத் தரும். ராகுவால் திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழும் அமைப்பு உள்ளது.
வழிபாடு
சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் அற்புதமாக இருக்கும். மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, நிலம், வாசல், சொத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். வழக்குகள் தீரும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். திருச்செந்தூர் சென்று வருவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
