எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்.. துலாம் ராசிக்கு இந்த வாரம் பணவரவு, வெளிநாட்டு யோகம்?

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-thulam-people-get-from-october-19-to-25

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல
பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டம். சந்தோஷமாக நண்பர்களுடன் வெளியில் செல்லும் அமைப்பு. கோயில்களுக்குச் செல்வது, ஷாப்பிங் செல்வது போன்றவை ஏற்படும். லாபத்தின் அளவு அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் மன வருத்தங்கள் படிப்படியாக குறையும்.

குட்நியூஸ்

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த பலவித சங்கடங்கள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் ஏற்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஏற்படும். கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆரோக்கியம்

வயிறு, முதுகுத் தண்டுவடம், பாதம் தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள். 3 ஆம் இடத்தில் இருந்த சந்திரன் 4 ஆம் இடத்திற்குச் செல்வது பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் என நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிறந்த ஊர், பிறந்த நாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.

வெளிநாடு யோகம்

பெரிய பெரிய விஷயங்களின் தொடர்புகள் ஏற்படும். அரசியல் தொடர்பு, அரசு தொடர்பு, பிள்ளைகள் சாதிப்பது, விளையாட்டுத் துறையில் சாதிப்பது போன்ற அமைப்பு உள்ளது. பைலட்டாகும் யோகம், மெடிஷன் துறையில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விமானத்தில் செல்வது, கப்பலில் செல்லும் அமைப்பு உண்டு. இன்ப சுற்றுலா, தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள்.

முன்னேற்றம்

பயணத்தில் நல்ல வெற்றிகள் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் சரியாக ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை பயக்கும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு கீழே இறங்குவது நன்மை பயக்கும். தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படும். நிறைய பேருக்கு ரியல் எஸ்டேட், நிலம், பள்ளி, கல்லூரி, கிளப் ஆரம்பிக்கும் அமைப்பு உள்ள.

வழிபாடு

ஆரோக்கியத்தை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சைனஸ் தொந்தரவுகள் வரும். குளிர்ந்த நீரில் குளிப்பது, குளிர்ச்சியான பொருள்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வேலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் புரிதல் குறைவு இருக்கும். சூழ்நிலைகள் சரியில்லை என்ற அமைப்பு இருக்காது.

லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான வளர்ச்சியைத் தரும். கண், காது, மூக்கு, நரம்பு, தலைவலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. துணை விஷயத்தில் ஏற்றங்களும், அனுகூலமும் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+