Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. பணம் கொட்டும்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக பலன்களைப் பெறும் அற்புதமான காலகட்டம். இதுவரை தடைபட்டுக் கொண்டே வந்த, இழுபறியான விஷயங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். முருகர் வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.
முயற்சிகளில் வெற்றி
வழக்கு போன்ற பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான அமைப்பு ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
பண வரவு அதிகரிக்கும்
பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பூர்வீகத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பூர்வீகமாக இருந்து வந்த இடத்தில் என்ன செய்யலாம் என பல ஆண்டுகாலமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்.
அவை எல்லாம் மாறி ஒரு தெளிவு பிறக்கும்.
சிக்கல்கள் தீரும்
குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லும் காலகட்டம் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணங்கள் அனைத்தும் வந்து சேரும். தொழில், அனுகூலம் பெரிய அளவுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும்.
அனுகூலம்
தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர முயற்சிகளை எடுப்பது நல்லது. தொழிலில் அனுகூலம் ஏற்படும். சிக்கல்கள் தீரும். படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். அடிவயிறு, கழிவுப் பாதையில் சிறு பாதிப்புகளுக்கும் கூட மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. ஜீரண உறுப்புகளில் பாதிப்பு இருக்கக்கூடிய ரிஷப ராசியினர் கவனமாக இருப்பது நல்லது.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications