Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு அள்ளி தரும் சுக்கிரன்.. 25 நாட்களில் திடீர் அதிர்ஷ்டம் நிச்சயம்
Sukkira Peyarchi: சுக்கிர பெயர்ச்சி சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன்14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் ரிஷப ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதாவது மிதுனத்தில் இருந்து கடகத்துக்குப் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 3 வது வீடு. ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து பலனைத் தரப் போகிறார். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ராசியாதிபதி ஆவார். 6க்கு உரியவர். கடன், நோய், பகை, எதிர்ப்பைத் தரக்கூடியவரும் சுக்கிரனே.

தடைகள் நீங்கும்
முயற்சி ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். கடந்த சில மாதங்களாக எந்த விஷயங்கள் எல்லாம் தடைபட்டதோ அந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த விஷயங்களை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தைரியம், வீரியம் பெருகும். சுக்கிரனோடு புதன் சேர்ந்திருப்பதால் பணம் ஏதாவதொரு வழியில் உங்களுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.
பண வரவு
சுக்கிரன் என்பது கையிருப்பு பணக்காரகன். அவர் தன ஸ்தானத்தின் அதிபதியான புதனோடு சேர்ந்து 3 ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தொழில், வேலை, வியாபாரத்தில் அபரிமிதமான பண வரவு உண்டாகும். நிறைய புதிய ஒப்பந்தங்களைப் போடுவீர்கள். தொழில் ஒப்பந்தம், வீடு வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களைப் போடுவீர்கள்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்குவதற்கான எண்ணம் தோன்றும். வீடுகளை கட்டுவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். விற்பனை சார்ந்த விஷயங்களில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கன்சல்டன்ஸி, கமிஷன் தொடர்பான துறையில் இருக்கும் ரிஷப ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
புதிய வேலை
ரியல் எஸ்டேட் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். விற்க முடியாத நிலத்தையும் விற்று முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய வேலைகள் கிடைக்கும். உங்களுடைய முயற்சி, தன்னம்பிக்கையால் வேலை கிடைக்கும். தொழில், வேலை அமைத்துக் கொள்வதற்கான நல்ல காலகட்டம் இது.
திடீர் அதிர்ஷ்டம்
ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல சுபகாரியங்கள் நடக்கும். ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். பூஷம் என்பது சனி பகவான்.
அனுகூலம்
சனி பகவான் உங்களுக்கு ராஜ யோகத்தை தரக்கூடிய கிரகம் என்பதால் உங்களுடைய முயற்சியால் நல்ல பாக்கியத்தையும், தொழிலையும் அமைத்துக் கொள்வதற்கான காலகட்டமாக இருக்கும். முயற்சியால், தந்தையால், தொழிலால், பயணங்களால் நல்ல பாக்கியம், அனுகூலம், ஆதாயம் ஏற்படும். செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரை ஆயில்யம் நடசத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் சுபகாரியம், திருமணம் சார்ந்த விஷயங்கள் சிறப்பு பெறும்.
முன்னேற்றம்
தனம், வாக்கு, குடும்பம் அனைத்து விஷயங்களும் சிறப்பு பெறும். காரியத்தில் கண்ணாக இருந்து நிலைநாட்டக் கூடிய காலகட்டமாக இருக்கும். குழந்தைகளால் புகழைப் பெறுவீர்கள். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பு பெறும். தகவல் தொடர்புத் துறையில் நல்ல செய்திகள் வரும். கலைத் துறையில் இருந்து நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதியில் வெற்றி பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications