For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - என்னென்ன கட்டுப்பாடுகள்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - என்னென்ன கட்டுப்பாடுகள் :மலையாள மாதத்தின் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை திறக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பான நாளை கோவில் திறக்கப்படுகிறது.

கோவில் திறக்கும் தினமான நாளை பூஜைகள் எதுவும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல், 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய மேல்சாந்தியை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நாளை மறுதினம் நடைபெறும். பந்தள அரண்மனையை சேர்ந்த 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருவர் புதிய மேல்சாந்தியின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

அதிமுகவுக்கு எரிச்சல்... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் - அமைச்சர் பெரியகருப்பன் அதிமுகவுக்கு எரிச்சல்... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் - அமைச்சர் பெரியகருப்பன்

மேல்சாந்தி தேர்வு

மேல்சாந்தி தேர்வு

மலையாளக் காலண்டர் அடிப்படையில் வரும் 16ஆம் தேதி துலா மாதம் பிறக்கிறது. இதையொட்டி வரும் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். அதன்பின் அடுத்த மேல்சாந்தி(தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவார். மாதப்பிறப்புக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டவுடன் அதற்குரிய பூஜைகள்,விளக்கேற்றுதல் போன்ற ஆகமங்களை தற்போதுள்ள மேல்சாந்த் வி.கே. ஜெயராஜ் போட்டி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கண்காணிப்பில் செய்வார்.

குலுக்கு சீட்டு முறையில் தேர்வு

குலுக்கு சீட்டு முறையில் தேர்வு

இதைத் தொடர்ந்து உபதேவதைகள் கோயில்களும் திறக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். 18 படிகளிலும் தீபங்கள் ஏற்பட்டு பூஜைகள் நடக்கும். ஆனால், கோயில் திறக்கப்பட்ட 16ம் தேதி மாலை எந்த பூஜையும்கோயிலில் நடக்காது. வரும் 17ம் தேதி உஷா பூஜை முடிந்தபின், சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாலிக்காபுரம் கோயில் மேல்சாந்தி ஆகியோர் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும். இதன்படி, பந்தளம் அரண்மனையில் குலுக்குச் சீட்டு போடப்படும். இதில் மேல்சாந்தியாக அடுத்துவருவோர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.

Recommended Video

    அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் உற்சவம்… 1000 பெண்களின் சரவிளக்கு பூஜை
    சாமி தரிசனத்திற்கு அனுமதி

    சாமி தரிசனத்திற்கு அனுமதி

    10வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகள் அந்த சீட்டை தேர்வு செய்து நிர்வாகத்திடம் வழங்குவர். அதில் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரில் உள்ளவர்களே மேல்சாந்தியாக அடுத்த ஓர் ஆண்டுக்கு அறிவிக்கப்படுவர். வரும் 17ம் தேதி முதல் 21ஆம் தேதிவரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆன்-லைன் முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள், முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

    5 நாட்கள் தரிசனம்

    5 நாட்கள் தரிசனம்


    கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டு வர வேண்டும். இந்த 5 நாட்களிலும் ஐயப்பனுக்கு நெய்அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், படிபூஜை, புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும்.

    நவம்பர் 15 நடைதிறப்பு

    நவம்பர் 15 நடைதிறப்பு

    அக்டோபர் 21-ம் தேதி நடை சாத்தப்பட்டு நவம்பர் 2ஆம்தேதி சித்திரா விஷேசத்துக்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் 3ஆம்தேதி கோயில் நடை சாத்தப்பட்டு, நவம்பர் 15ம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனுக்காகத் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    English summary
    Sabarimala Ayyappan Temple opens tomorrow for the month of Ipasi Puja. Devotees coming for Sami darshan are advised to follow the corona restrictions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X