Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2025: கடக ராசிக்கு அடிச்சது திடீர் யோகம்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன் 2025: கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்ட துன்பங்களில் இருந்து விடுபடப் போகும் கடக ராசிக்காரர்களே.. 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள் என்ன?.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.. சனி பகவான் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யப் போகிறார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Elarai sani for kadagam)

2025 புத்தாண்டு விரைவில் வரப் போகிறது. வரும் புத்தாண்டில் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார் சனி பகவான். அந்த ஐந்து ராசிகளில் கடகமும் ஒன்று. (Sani Peyarchi for kadagam). அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டு வந்த கடக ராசிக்கு இனி பாக்கிய சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நடக்கப் போகிறது. என்னென்ன பலன்களை சனி பகவான் அள்ளித் தரப் போகிறார் என தெரிந்து கொள்ளலாம்.

sanipeyarchi astrology

கடக ராசியைப் பொருத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகாலமக அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே பிரச்னைதான். முன்னதாக சனி மகரத்தில் இருந்தார். மகரத்தில் இருக்கும்போது கடக ராசியின் அதிபதி சந்திரனுக்கு சனி சத்ரு கிரகம் என்பதால் சமசப்தமாக பார்வை எனும் ஏழாம் பார்வையாக மகர ராசியைப் பார்த்தார். குறிப்பாக, திருவோணம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும்போது, கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகி ரத்தாகி இருக்கும்.

வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், மருத்துவமனை, என்ன நோயென்றே தெரியாமல் மருத்துவ செலவுகள் வந்திருக்கும். சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து மனம் வெறுத்திருந்திருப்பார்கள். அஷ்டமசனி கடக ராசிக்காரர்களை மனம் நொந்துபோகச் செய்திருக்கும். கடந்த ஆண்டு கும்பத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்தபோது கடக ராசிக்கு வம்பு, வழக்கு, கோர்ட் பிரச்னைகள் துரத்திக் கொண்டே இருந்திருக்கும்.

ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு வந்த பிறகு கடகத்துக்கு லாப குருவாக அமைந்தது. இதனால், சில நல்ல பலன்கள் கிடைத்திருக்கும். தற்போது, சனிப்பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி பூரணமாக விலகுகிறது. 27 1/2 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு ஜாக்பாட்தான். தற்போது பாக்கியசனி நடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக துன்பத்தை சந்தித்து வந்தவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். வாங்கிய கடன், வழக்குகள் போன்ற ஒவ்வொரு பிரச்னைகளும் படிப்படியாக தீரும். மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுக்கப் போகிறார் சனி பகவான்.

எங்கு தோல்வி அடைந்தீர்களோ, எங்கு அவமானப்பட்டீர்களோ அந்த இடங்களில் எல்லாம் தைரியமாக பயணம் செய்வீர்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம் ஆகப்போகிறது. இனி வாழ்வில் எல்லாமே மகிழ்ச்சிதான். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் ஓரளவுக்கு தப்பித்திருப்பார்கள். ஆனால், பூசம், புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இனி கடக ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி காலம் நடக்கப் போகிறது. அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் போகிறது. சொத்துகள் வாங்க முடியும், பழைய சொத்துகளை விற்க முடியும், கடனை அடைத்து விடுவீர்கள். பித்ரு வர்க்கத்துக்கு ஆதாயம் கிடைப்பதால் அதன் மூலம் நீங்கள் மேன்மை அடைவீர்கள். அனைத்து விஷயங்களிலும் படிப்படியாக வெற்றி காண்பீர்கள்.

விசா கிடைக்கும், வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். வாழ்வாதாரத்தில் மேன்மை, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதித் துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். ரியல் எஸ்டேட், மீடியா துறையில் இருப்பவர்கள் வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். லாஜிஸ்டிக்ஸ், டிரான்ஸ்போர்ட் துறைகளில் இருப்பவர்களுக்கும் இதுநாள் வரை இருந்து வந்த வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தவிர்க்க வேண்டியவை: இந்த காலகட்டங்களில் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு என்ற கிரகத்தை குரு தனது 9ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.
குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். எனவே, நிதி முதலீடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதலீடா என்பதை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

கல்வி: கடக ராசிக்காரர்கள் கல்வியில் எப்போதும் இயற்கையாகவே கூடுதல் கவனத்துடனேயே இருப்பார்கள். நிதி, பொருளாதாரம், தகவல் தொடர்பு, சட்டப் படிப்பு குறித்து படிப்பவர்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெற்றிப் பாதையாக அமையும்.

பெண்களுக்கு: சனிப்பெயர்ச்சி காலத்தில் பெண்கள் உடல் நிலையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு பஞ்சமாதிபதி, தசமகேந்திரத்துக்கு அதிபதியான செவ்வாய் ராசியில் நீச்சம் அடைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இயற்கை வைத்தியங்களை எடுத்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ராகு 8 ஆம் இடத்தில் இருப்பதால் அடிவயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உஷ்ணம் இல்லாமல் இருப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைதியாக கையாள வேண்டும். வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு, யோகா செய்வதால் அமைதி, பரபரப்பு இல்லாமல் இருப்பதற்கான பக்குவங்களைக் கொடுக்கும்.

பரிகாரங்கள்: கடக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியில் பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. வழக்கமாக ஆஞ்சநேயர், நரசிம்மர் வழிபாடு செய்வது நற்பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மொத்தத்தில் 100க்கு 90 சதவீதம் சனிப்பெயர்ச்சி நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுத்து செழிப்பான ஆண்டாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+