அள்ளி கொடுக்கும் சனிப்பெயர்ச்சி.. மிதுனத்துக்கு சொந்த வீடு, வாகன யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் யோக பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 9 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் பத்தாம் இடத்துக்குப் போகிறார். இதுவரை பத்தாம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் 9 ஆம் இடத்துக்கு வருகிறார். இந்த சனி மற்றும் ராகு இரண்டு மாத காலங்களுக்கு பத்தாம் இடத்தில் ஒன்றாக இருக்கப் போகின்றனர். வேலை விஷயங்களில் நல்ல தெளிவு கிடைக்கும். பத்தில் சனி வந்தால் பதவி போகும் என்பது கிடையவே கிடையாது.

மிதுன ராசியைப் பொருத்தவரை உங்கள் ராசியில் குரு பகவான் வருகிறார். கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த இரண்டு கேந்திரத்திலும் சனியும், குருவும் இருப்பதால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவீர்கள். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். உத்தியோகம், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களுக்கு மட்டுமல்ல திருமண விஷயம், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் போன்ற அனைத்திலும் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.

உங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையைத் தரக்கூடிய காலமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் புதிய வியாபார உத்திகளைக் கையாளலாம். தொழிலில் மாற்றங்களைச் செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளால் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். பத்தாம் இடத்தில் ராகு இருக்கக்கூடிய இந்த இரண்டு மாத காலம் மார்ச் 30 முதல் மே 18 ஆம் தேதி வரையான காலகட்டத்தில் மனதில் பெரிய குழப்பம் இருக்கும். பெரிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

ஜூன் மாதத்திற்குப் பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது. குருவும் உங்கள் ராசிக்கு வந்துவிடுவார். சனி 10 இடத்துக்கும், ராகு 9 ஆம் இடத்துக்குப் போய்விடுவார் இதற்குப் பிறகு முடிவெடுப்பது நல்லது. மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. காதல் திருமணம் ஏற்படுவதற்கான யோகம் உண்டு. வீட்டில் இருந்து வந்த எதிர்ப்புகளை மீறி முடிவெடுப்பவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

திருமணத் தடை நீங்கும். தெளிவான முடிவெடுக்கும் காலகட்டமாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் எடுக்க கூடிய காலகட்டமாக இருக்கும். புனர்பூஷ நட்சத்திரக்காரர்களுக்கு புதிய இடங்கள், புதிய மனிதர்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அடுத்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும்.

வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பது, கடன் உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு நிறைய சம்பாதிப்பதற்கான யோகத்தைக் கொடுக்கும். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

பெண்களுக்கு நல்ல மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பிறந்த வீட்டால் நன்மை உண்டாகும். பல ஆண்டுகளாக இருந்து வந்த சொத்து விவகாரங்கள், வழக்குகள் சாதமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு பரிசுகள், விருதுகள் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது, ஆராய்ச்சியாளர்களுக்கு உலக அளவில் விருதுகள் பெறுவதற்கான யோகம் உண்டு.

பரிகாரங்கள் - ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வலம் வருவது தோஷங்களை நிவர்த்தி செய்யும். மதுரையில் திருமோகூரில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபடுவது அமோகமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+