சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் மிதுன ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு கடந்த நான்கரை மாதங்களாக சனி பகவான் மீன மனையில் வக்கிரமாக இருந்தார். வரும். 28 ஆம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் உங்களுக்கு அஷ்டமாதிபதி. வலி, வேதனை, பாக்கியத்தை கொடுக்க கூடியவர். சனி வக்கிரமாக இருந்ததால் வேலையில் அழுத்தத்தை அனுபவித்து வந்திருப்பீர்கள். வேலை சார்ந்த விஷயத்தில் பல பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்காதது, மேலதிகாரிகளின் அழுத்தம் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள்.
வெளிநாட்டு வேலை
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனி 10 ஆம் இடத்தில் வக்கிர நிலையில் தன் இயல்புக்கு மாறிய தன்மையில் இருக்கும்போது இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நல்ல தூக்கம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வருத்தப்பட்டிக் கொண்டிருந்த மனநிலை மாறும். வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், வேலை கிடைக்காதவர்களுக்கு நல்லது நடக்கும் காலகட்டம்.
சுபகாரியங்கள் நடக்கும்
சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வரன்கள் அமையும். திருமணம் சார்ந்த சுபகாரியங்கள் நடக்கும். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு சுபகாரியங்கள் நடக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட பழிகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உங்களை குறைக் கூறிக் கொண்டிருந்த நிலைமைகள் மாறும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம்
ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நிறைய பேருக்கு கால் வலி, மூட்டு வலி போன்றவை ஏற்பட்டிருக்கும். அந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும். புதிய வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள் பழைய வீடுகளை வாங்கலாம் என்பது போன்ற எண்ணம் ஏற்படும். பழைய வாகனம், பழைய வீடுகளை வாங்கும் எண்ணம் தோன்றும். கடனுக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கடனை திருப்பி கட்டுவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும்.
குழந்தை பாக்கியம்
வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். கல்வி நிலையங்கள், அக்கவுண்ட், ஆடிட்டிங், தகவல் தொடர்புத் துறைகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தன பாக்கியம், வேலை பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications