சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. புது வீடு, புது கார்.. லைஃப் டைம் செட்டில்மென்ட்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
உங்கள் ராசிக்கு சனி பகவான் 10, 11க்கும் உரியவர். தொழில், லாப ஸ்தானத்தின் அதிபதியாக சனி பகவான் உள்ளார். தற்போது ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அலைச்சல்கள், மன அழுத்தம் இருந்திருக்கும். சனி பகவான் தற்போது வக்கிரமடைவதால் இதுவரை இருந்து வந்த தடைகள், விரையம், பிரச்சனை அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
வேலைவாய்ப்பு
தொழிலில் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அந்த பிரச்சனை எல்லாம் சரியாகும். நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால் பிரச்சனை, பிடித்த வேலை இல்லை என வருத்தத்துடன் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இனி திருப்தியான வேலை அமையும். வரும் 138 நாட்களில் வேலை, தொழில், வியாபாரம் சிறப்பு பெறும் காலகட்டமாக இருக்கும்.
குடும்பம்
சனி பகவானே பாதகாதிபதியாகவும் இருப்பதால் ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன், பிரச்சனையே இல்லை என்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமாகும். சனி பகவான் 3 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் பார்வையாக குடும்பத்தை பார்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். 2ம் இடத்தில் இருக்கும் கெடுபலன்கள் குறையும்.
தன வரவு அதிகரிக்கும்
என்னதான் நல்லது செய்தாலும் உங்களிடம் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள் கூறியது சரியென்று உணரக்கூடிய நிலைமை வரும். பிரிந்த குடும்பத்தில் ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் சார்ந்த பிரச்சனைகள், தடைகள், இதுவரை வராமல் இருந்த பணம் உங்களிடம் வந்து சேரும். கடனை சனி பார்ப்பதால் கடனை அடைக்கக்கூடிய சூழல், புதிய கடன் வாங்கும் சிந்தனை ஏற்படும். கடன் வாங்கி தொழில் விருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வங்கிகளில் கடன் கிடைக்கும்.
ஆரோக்கியம்
உடல்நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சீராகும். சரியான மருத்துவர்கள், மருத்துவமனைகள், அதன் மூலம் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் சுமூகமாக மாறுவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாகும். வம்பு, வழக்குகள், கோர்ட் போன்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்ற எண்ணம் தோன்றும். விரையமாக இருந்த விஷயங்கள் நல்லவையாக மாறும்.
பாக்கியம்
10 ஆம் பார்வையாக 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தந்தை சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பாக்கியங்கள் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள், பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம், அரசாங்க வேலை, பிள்ளைகள் செட்டிலாகும் யோகம் உண்டாகும்.
வெளிநாடு செல்லும் யோகம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் நன்மைகள், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். இனி நல்ல தூக்கம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இனி பாக்கியங்களை அள்ளித் தரும் காலகட்டமாக இந்த சனி வக்கிர பெயர்ச்சி காலகட்டமாக உங்களுக்கு அமையும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications