Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஏழரை சனியிலும் கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றம் இருக்கும் அற்புதமான மாதமாக இருக்கும். முன்னேற்றமும், திருப்புமுனை மிகுந்த மாதமாக இருக்கும். முதல் பகுதி 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் உங்களுடைய ராசியைப் பார்ப்பது மற்றும் குருவின் பார்வையில் வருகிறார். முதல் 15 நாட்கள் சுமாராகவே இருக்கும். ஆனால், இரண்டாம் 15 நாட்கள் தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும்.
பாதிப்புகள் இல்லை
நீங்கள் நினைத்தது அனைத்தும் கிடைக்கும் யோகம் உண்டு. கிரக அமைப்புகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. ஏழரை சனி நடக்கிறதே என்று கவலைப்படத் தேவையில்லை. விரையம் போன்ற அமைப்புகள் மட்டுமே காணப்படும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவுமே இருக்காது. 2027 ஜூன் மாதம் வரும் சனிப் பெயர்ச்சியில் இருந்து ஜென்மசனி துவங்கப் போகிறது.
கடன், நோய் தீரும்
செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு ராசியின் செவ்வாய் குருவின் பார்வையில் வருவதாலும், அடுத்தடுத்து யோக அமைப்புகள் உள்ளது. 5 ஆம் இடத்தில் இருக்கும் சூரியன் 6 ஆம் இடத்தில் வருவார். 6 ஆம் இடத்தில் சூரியன் வரும்போது கடன், நோய் தீரக்கூடிய வாய்ப்புள்ளது. எந்த விஷயங்களாக இருந்தாலும் அதில் நல்லது நடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.
திருமணம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். அவரவருடைய பிறந்த ஜாதக அமைப்பிற்கு ஏற்றாற்போல தசாபுத்திக்கு ஏற்றவாறு போன மாதத்தை விட இந்த மாதத்தில் வருமானம் அதிகம் பெறுவீர்கள். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் செவ்வாய் குருவின் பார்வையில் வருவதால் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் திருமணத்திற்கான பேச்சுவார்த்தைகள், நிச்சயதார்த்தம் போன்றவை நடக்கும்.
சுப செலவுகள்
அடுத்த ஆண்டு தை மாதம் முதல் சித்திரை மாதத்திற்குள் இளைய பருவத்தினருக்கு திருமணம் நடக்கும் யோகம் உள்ளது. மாதத்தின் முதல் 15 நாட்கள் சூரியன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளைப் பற்றிய இருந்த கவலைகள் அனைத்தும் மாறும் காலகட்டமாக இருக்கும். அதற்கடுத்த 15 நாட்கள் குழந்தைகளால் நல்ல செலவுகள் வந்து சேரும்.
பெண் குழந்தைகளுக்கு நகை வாங்குவது, மங்கல அமைப்புகள் நடக்கும் யோகம் உள்ளது. பெரிய கஷ்டங்கள், பாதிப்புகள் எதுவும் நடக்காது. அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications