மீனம் ராசிக்கு பொற்காலம், அதிர்ஷ்டம் ஆரம்பம்.. ஜென்ம சனி இருப்பதால் 2 விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

Sevvai peyarchi Meenam lucky zodiac signs

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.

இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி மீனம் ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியைப் பொருத்தவரை கடந்த சில வருடங்களாக அவமானத்தையும், எதிரிகளால் தொல்லையையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இப்போது அந்த அவமானங்களில் இருந்தெல்லாம் விடுபடப் போகிறீர்கள். 6 ஆம் இடத்துக்கு செவ்வாய் சென்றிருக்கிறார். அந்த 6 ஆம் வீட்டு அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் குருவோடு சேர்ந்திருக்கிறார்.

குடும்பம்

அடுத்த ஜூலை 15 ஆம் தேதி வரை 5 ஆம் இடத்துக்குப் போவதால் உங்கள் கெளரவம் பாதுகாக்கப்படும். உங்களுடை எதிரிகளால் கொஞ்சம் அடங்கி இருப்பீர்கள். குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் நன்மைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பும், வளர்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தில் புதிய உறவுகள் வரும் வாய்ப்பு உள்ளது. வம்சம் விருத்தியாகும். பையன் இருந்தால் பேரன் பிறப்பான். பேரன் இருந்தால் கொள்ளுப் பேரன் பிறக்கும் அற்புதமான யோகம் உண்டு. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

எதிர்ப்பு நீங்கும்

தசம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் அலுவலகம் ரீதியாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புள்ளது. சுபச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அந்த செலவுக்கு செவ்வாயும் காரணமாக இருப்பார். கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும்.

ஆரோக்கியம்

ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளது. தோல், நரம்பு சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதுதொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். ஆரோக்கியத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். மிதுனம், துலாம், விருச்சிகம் வரிசையில் மீன ராசிக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

ஜென்ம சனி

ஜூலை 15 ஆம் தேதி முதல் உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் மேன்மையை ஏற்படுத்தி கெளவரத்தை காப்பாற்றும். வியாபாரிகளைப் பொருத்தவரை அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜென்ம சனி இருப்பதால் எது கிடைத்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தைரியான முடிவுகள் தவறாகப் போகும் வாய்ப்புள்ளது. வேலை சார்ந்த விஷயங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கவனம்

வீண் பேச்சுகளை, ரகசியங்களை பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து சேர்க்கை ஏற்படுத்த முயற்சி எடுக்க நல்ல நேரம், உடன்பிறப்புகள் நல்ல விதமாக செயல்படுவார்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சி முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+