தனுசு ராசிக்கு லக்கி ஜாக்பாட்.. பிரச்சனை, கடனுக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி மகிழ்ச்சி மட்டும்தான்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி பலன்
நேர்மை, ஒழுக்கம், நியாயம், கண்ணியம், கட்டுப்பாடுடன் இருக்கக் கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். ராசிக்கு 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் ஜூன் 7 ஆம் தேதி பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜூலை 28 ஆம் தேதி வரை உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அனைத்து விதமான நன்மைகளையும் உங்களுக்கு செய்யப் போகிறார். நிறைய விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.
பிரச்சனையே வாழ்க்கை
ஏழரை சனி, ராகு கேது பெயர்ச்சி பாதிப்பு என பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். வாழ்க்கையில் போராட்டம் மட்டுமே நடந்து அதனைப் போராடி ஜெயிக்கக் கூடியவர்கள் நீங்கள். திருமணம், குழந்தைப் பேறு, படிப்பு என பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வரக்கூடிய கணவன், மனைவியால் நிறைய பிரச்சனைகள் சந்திக்கும் சூழல் உங்களுக்கு இருக்கும். வேலை செய்யக்கூடிய இடத்திலும் உங்களுக்கு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். தொழில் செய்யும் தனுசு ராசிக்காரர்களுக்கு கழுத்துக்கு மேல் கடன் இருந்திருக்கும். அதனால் பெரிய அவமானம், சண்டை, சச்சரவுகள் உண்டாகியிருக்கும்.
போராட்டம்
குறிப்பாக செவ்வாய் திசையோ, ராகு திசையோ வந்தால் எப்போதும் பிரச்சனைகளும், போராட்டங்களாகத்தான் இருக்கும். வெளிநாட்டில் போய் இருந்தவர்கள் கூட நிம்மதி இல்லாமல் தான் இருப்பீர்கள். வெளிநாட்டில் சென்று வேலை இழப்பு, கணவன், மனைவி பிரிவினை, லோன் கட்ட முடியாத சூழல், பிள்ளைகளால் கோர்ட், கேஸ் என்ற நிலைமை இதுவரை இருந்திருக்கும்.
பாக்கியம்
தற்போது ஒவ்வொரு பிரச்சனைகளும் படிப்படியாக தீர்ந்து கொண்டே வரும். இந்த காலகட்டத்தில் செவ்வாய் பெயர்ச்சியான உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கப் போகிறது. செவ்வாய் தனுசு ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான 9 ஆம் அதிபதி பாக்கிய ஸ்தானத்தில் வருகிறார். தொழிலில் உங்களை ஏமாற்றியவர்கள் கஷ்டப்படும் சூழ்நிலையும், நீங்கள் வளர்ச்சியை நோக்கி பயணிக்கக்கூடிய அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.
வேலைவாய்ப்பு
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். வேலை மாற்றம் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல வேலை மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுடன் வேலைவாய்ப்பு, ஆரோக்கியத்தில் முன்னேற்றம், திருமண வாய்ப்பு, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு, குடும்பத்தில் நிம்மதியாக கணவன், மனைவி, குழந்தைகளுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.
இடம் வாங்கும் யோகம்
நிறைய தனுசு ராசிக்காரர்கள் நீதிமன்றம், வம்பு, வழக்கு என்று சுற்றிக் கொண்டிருந்திருப்பீர்கள். இனி அந்த நிலை எல்லாம் மாறும். தொழில், வேலை, பூர்வீக சொத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும். இடம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடையும் யோகம் உண்டாகும். அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும், இடம், வீடு விற்கக்கூடிய யோகம், அதன் மூலம் கடனை அடைக்கக் கூடிய யோகம் வரும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு சென்று வாழும் அமைப்பு. வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பிஆர் கிடைத்து செட்டிலாகும் அமைப்பு உள்ளது. அங்கேயே வேலை மாற்றம், தொழில் மாற்றம் செய்யும் அற்புதமான பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். படிக்க முடியாத மாணவர்கள் மீண்டும் படிப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முன்னேற்றம்
தனுசு ராசிக்காரர்கள் மீண்டும் எழுச்சி பெற்று வாழ்க்கையில் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழும் அற்புதமான அமைப்பை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் அற்புதமான முன்னேற்றம் வாழ்க்கையில உண்டாகும்.












Click it and Unblock the Notifications