லக்கி பாஸ்கராக மாறும் சிம்மம்.. சொந்த வீடு, நிலம், சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

Sevvai peyarchi Simmam lucky zodiac signs

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவது கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.

அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார், கடகத்தில் நீச்சமாக இருந்த செவ்வாய் உங்கள் ராசியில் பெயர்ச்சியாகியுள்ளது. சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் வீட்டில் உச்சமடைகிறார். அதனால் எப்போதுமே சிம்ம ராசிக்கு ஒரு ஆளுமை கண்டிப்பாக இருக்கும்.

செவ்வாய் பயணம்

சிம்ம ராசியில் பாக்கியத்திலும், கேந்திரத்திலும் செவ்வாய் பயணிக்கிறார். உங்களுக்கு எப்போதுமே பாக்கியத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியமான கிரகம் செவ்வாய். உங்கள் ராசியில் ஜூலை 28 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். ராசியில் கேது பகவான், அஷ்டமத்தில் சனி பகவான் இருந்ததால் கடந்த மூன்றில் இருந்து 6 மாதமாக குழப்பமான சூழ்நிலைகள் கண்டிப்பாக இருக்கும். வேலையில் இருக்கலாமா வேண்டாமா, இன்டர்வியூ ஹோல்டாகும் வாய்ப்பு போன்றவற்றை சந்தித்திருப்பார்கள்.

வெற்றி

என்ன பிரச்சனைகள் இருந்தாலும் இனி வெற்றியைத் தரும் காலகட்டத்தை செவ்வாய் கொடுப்பார். இனிவரும் காலத்தில் குழப்பமே இல்லாமல் என்ன செய்யலாம் என்று எழுதி வைத்துக் கொள்வது நல்லது. குழப்பத்தில் இருந்து வெளிவருவீர்கள், புதிய வேலைவாய்ப்பு, வேலைமாற்றம் உண்டாகும். நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் தொழிலில் மந்தத்தை கண்டிருப்பீர்கள். அந்த நிலை உங்களுக்கு மாறும்.

முருகன் வழிபாடு

மகம், பூரம் நட்சத்திரக்காரர்கள் கடந்த இரண்டரை வருடமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த நீங்கள் அதில் இருந்து மீண்டு வருவீர்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்வது, கந்த சஷ்டி கவசம் சொல்வது அற்புதத்தை ஏற்படுத்தும். செவ்வாய் ராசியிலேயே இருக்கும்போது 4 ஆம் பார்வையாக ராசியைப் பார்ப்பார்.

சொத்துகள் வாங்கும் யோகம்

வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யோசிக்காமல் இந்த காலகட்டத்தில் புக் செய்யும் யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டை புனரமைப்பது போன்றவற்றை செய்வீர்கள். குழம்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மகம், பூரம் கண்டிப்பாக வீடு, நிலம் வாங்குவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும்.

திருமணம்

இடம் விற்பது, விற்றதன் மூலம் வரும் பணத்தை கடன் கட்டுவது, வேறு ஒரு இடத்தை வாங்கும் யோகம் உண்டாகும். ராசிக்கு 7 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமண யோகம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திருமணத்தில் வரும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருப்பவர்கள் மீண்டும் சேரும் யோகம், விவாகரத்து கிடைப்பது, மறுமணம் யோகம் உண்டாகும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு வாய்ப்புகள் தேடி வந்து சேரும். வெளிநாடு முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் புதிய வேலைகள் கிடைக்கும். வேலை இழந்தவர்களுக்கு, மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். நஷ்டத்தில் இருந்து விடுதலை அடையும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+