Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது.. பண மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

Sevvai peyarchi Thulam lucky zodiac signs

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.

அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள். உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். ஜூலை 28 ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் உங்களுக்கு பலனைப் போகிறார். இதுவரை உங்களுக்கு இருந்துவந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் விடுதலையைக் கொடுக்கக்கூடிய ஆரம்பகாலம் தான் இந்த செவ்வாய் பெயர்ச்சி.

முன்னேற்றம்

துலாம் ராசிக்கு 2 ஆம் அதிபதி தனக்காரகன் செவ்வாய். 11 ஆம் இடத்தில் அவர் பெயர்ச்சியாவது சிறப்பான அமைப்பாகும். மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளன. 6 இல் சனி, பாக்கிய ஸ்தானத்தில் குரு, 5 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் உயரத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி பயணிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

வேலைவாய்ப்பு

வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முக்கியமான நேரமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பு, அரசாங்க வேலை வாய்ப்பு, அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பட்டங்கள், பதவிகள், வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி, நீட், ஜேஇஇ எழுதுபவர்களுக்கு பெரிய வாய்ப்பைக் கொடுக்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு ஏற்படும். வேலைமாற்றம் செய்வதற்கு முயற்சிப்பவர்கள் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு செல்வதற்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாடு பயணம், வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். விசா கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி விசா கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களும் உங்கள் நேர்மை காரணமாக நிறைய நம்பிக்கை துரோகம், பிரச்சனை, அலுவலக அரசியலில் சிக்கி இருந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமை எல்லாம் மாறும். யாரெல்லாம் உங்களுக்கு எதிராக அரசியல் செய்தார்களோ அவர்களெல்லாம் தெறித்து ஓடக்கூடிய சூழல் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கும்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிஆர் வாங்கும் அமைப்பு உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். மனைவி, கணவன் மூலமாக நிறைய லாபங்கள் கிடைக்கும். வேலை இல்லாத கணவன், மனைவிக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருமணம்

ராசிக்கு 7 ஆம் அதிபதி 11 இல் இருப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் செய்யக் கூடியவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். நல்ல வருமானம் கிடைக்கும் யோகம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் யோகம் உண்டாகும். அனைத்து விதமான விஷயங்களிலும் வெற்றியைக் கொடுக்கும் அமைப்பாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+