விருச்சிகத்தின் மாஸ் என்ட்ரி.. சொந்த வீடு, கார், திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செவ்வாய்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

sevvai-peyarchi-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-from-june-7-to-july-28

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.

அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக ஒழுக்கம் கொண்டவர்களாகவும், எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்கள் ராசி அதிபதியின் செவ்வாய் 10 ஆம் இடம் எனும் கேந்திர ஸ்தானத்தில் வரும் தற்போது வந்திருக்கிறார். ஜூலை 28 ஆம் தேதி வரைக்கும் பெயர்ச்சி பலனை செவ்வாய் கொடுக்கப் போகிறார். விசேஷமான யோக பலன்கள் கிடைக்கப் போகின்றன.

தொட்டது துலங்கும்

ராசியதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சமாக இருந்து, நீச்ச பலத்தில் இருந்து விடுபட்டு 10 ஆம் இடம் எனும் கர்ம ஸ்தானத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். வாழ்க்கையில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கப் போகும் ஆரம்ப காலம்தான் இந்த செவ்வாய் பெயர்ச்சி. அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரப் போகின்றன. செவ்வாய் கேந்திரத்தில் பயணிக்கும் போது உங்களுக்கு அனைத்துவிதமான வெற்றிகளும் கிடைக்கும்.

கடன் தீரும்

நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் சாதிக்கக்கூடிய அமைப்பு ஜூலை 28 ஆம் தேதி வரை உள்ளது. இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளிவரக் கூடிய காலகட்டமாக இருக்கும். கடனில் இருந்து வெளிவராமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்து உங்கள் ராசியை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். அப்போது, நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் வெற்றியைக் கூடிய அமைப்பாக இருக்கும்.

வேலைவாய்ப்பு

வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம் செய்யக் கூடியவர்களுக்கு வேலைமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கும் ஆரம்ப காலகட்டமாக இருக்கும். இனி வாழ்க்கையில் நிறைய உச்சத்தை தொடக்கூடிய அமைப்பாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு நல்ல அமைப்பாக இருக்கும்.

வேலை மாற்றம்

வேலை மாற்றம் செய்யக் கூடியவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 8 ஆம் இடத்தில் குரு இருப்பதால் உங்களை வேலையை விட்டு அனுப்பக் கூடிய சூழல் உண்டாகும். வேலை மாற்றம் கண்டிப்பாக உண்டாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் பார்வையாக 4 ஆம் இடத்தையும், 8 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தையும் பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். வெளிநாடு பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உறுதியாக கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வீடு, நிலம் வாங்கும் யோகம்

தேவையில்லாத மனக் குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் 7 ஆம் பார்வையாக 4 ஆம் இடத்தை பார்ப்பதால் வீடு, வாகனம், வண்டி சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, வீடு கட்டுவது, வீடு மாறுவது, வீடு புனரமைப்பது போன்ற அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு அற்புதமான காலகட்டம்.

பூர்வீக சொத்துகள்

வீடு விற்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வீடு விற்பது, இடம் விற்பது போன்ற முயற்சிகள் வெற்றி பெறும். அதன் மூலம் உங்கள் கடன் பிரச்சனை தீரும் வாய்ப்புகள் உண்டு. 8 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பது பூர்வீக சம்பந்தமான சொத்து பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். பூர்வீகத்தில் இடம் வாங்கும், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்தை விற்கு அதன் மூலம் வரும் பணம் உங்கள் கடனைத் தீர்க்கும்.

அனுகூலம்

5 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் குழந்தைகள் மூலமாக அனுகூலமான சூழல் உண்டாகும். காதல் செய்யக் கூடியவர்களுக்கு காதலில் வெற்றி அடையும் அமைப்பு, காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு. நீதிமன்றம், வம்பு, வழக்கு பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும். அதன் மூலமாக மன நிம்மதி உண்டாகும். மொத்தத்தில் அனைத்து விதமான யோகத்தையும் இந்த செவ்வாய் பகவான் கொடுக்கப் போகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+