மீன ராசிக்கு அடுத்த 42 நாட்களில் அற்புத மாற்றம் - இந்த தப்பு மட்டும் பண்ணாம பார்த்துக்கோங்க
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறது. அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவது கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழில், வேலை, திருமணம் சார்ந்த விஷயங்கள், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
மீனம் ராசி பலன்
உதவி மனப்பான்மை படைத்த மீன ராசிக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று ராசிக்கு 6 ஆம் இடத்துக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி உள்ளார். அவர் ஜூலை 28 ஆம் தேதி வரை 42 நாட்களுக்கு இந்த அமைப்பில் இருந்து பலன்களை தரவுள்ளார். மீன ராசிக்கு ஜென்ம சனி நடைபெற்று வருகிறது. தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சுப காரியங்கள்
நிலம் சார்ந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். இறங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். நீண்ட கால தடைகள் சற்று நிவர்த்தியாகும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் சார்ந்த முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி, முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டு துறைகளில் இருப்போருக்கு ஏற்றம் உண்டு.
உத்யோக மாற்றம்
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு எதிர்பார்த்தபடி வேறு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் இட மாற்றம் நிச்சயம் ஏற்படும். வேலை மாற்றம் சிந்தனையில் இருப்போர் இந்த 42 நாட்களில் அதற்கு அதிகளவு முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
வெளிநாடு முயற்சி
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டு. அளவான கடனுக்கு சென்றால் நல்லது நடக்கும். செவ்வாய் பார்வை நன்றாக இருப்பதால் தொழிலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
பொறுமை
ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை பிரச்னை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் நிச்சயம் உண்டு. சண்டை, சச்சரவுகளும் அதிகம் வரும். கணவன், மனைவி உறவில் அதிக எச்சரிக்கை அவசியம். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வம்பு, வழக்குகள் வரும். எனவே தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
கடன்
இந்த காலத்தில் கடன் வாங்கி எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முதலீடுகளில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்ப உறவுகளால் வீண் விரயம் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இல்லையென்றால் இழப்பு இருக்கும்.
-
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications