Rasi Palan This Week: சிம்ம ராசி தொட்டதெல்லாம் சிக்ஸர்.. இவ்வளவு மாற்றங்களா

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-that-simmam-leo-signs-will-get-from-october-27-to-novembe

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

சிம்மம் ராசி மற்றும் சிம்ம லக்னத்தினருக்கு அந்த வாரம் அமோகமாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். எதிரிகள் பலமிழப்பார்கள். வம்பு, வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து, சொத்துகள் கைக்கு வரும். பண வரவு சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

குடும்பம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தாய், தந்தை வழி உறவுகளில் நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகி இணக்கம் ஏற்படும். பெற்றோரால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மனஸ்தாபம் விலகி அந்யோநியம் அதிகரிக்கும். காதல் உறவில் இனிமைக் கூடும். தொடர்ச்சியாக இருந்த மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான மன நிலைக்கு செல்வீர்கள்.

உற்சாகம்

மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரித்து உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். பதற்றம் குறைந்து நிம்மதி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் உண்டாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகி, அடுத்தடுத்து நல்லதுகள் நடக்கும். வாழ்க்கை அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் வகையில் நல்லவை அதிகம் நடக்கும் வாரம் இது.

கவனம்

குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கலை, ஊடகம் துறையில் இருப்போருக்கு சின்ன சின்ன தடைகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நரம்பு, தலைவலி, முதுகு வலி, பாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடுவது மேன்மையை கொடுக்கும். கோளர்பதி அதிகம் கேட்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+