Simmam Rasi Palan: சிம்ம ராசியினரே அஷ்டமசனியை மறந்துடுங்க.. 4 கிரகங்களால் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல் பகுதி முழுவதும் சூரியன் உங்கள் ராசியில் வலுவாக இருக்கிறார். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். இது இரண்டுமே யோக அமைப்பாகும். ஆனால், மாதத்தின் முதல் பகுதியில் சுக்கிரனால் அடிக்கடி பயணங்கள், செலவுகள் அதிகமாக இருக்கும். வீடு வாங்குவது, வண்டி வாங்குவது, வாகனம் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது போன்ற வீடு சார்ந்த, மனைவி சார்ந்த, பெண் குழந்தைகள் சார்ந்த செலவுகளைச் செய்வீர்கள்.
பண வரவு சூப்பர்
பண வரவும் அற்புதமாக இருக்கும். அஷ்டமசனி உங்களுக்கு நடந்து கொண்டிருப்பது என்பதை நீங்கள் மறந்து விடலாம் அந்த அளவுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அஷ்டமசனி செயலற்று இருக்கும். எதிர்மறையான விஷயங்கள் தெரிந்தாலும் சமாளித்து செல்வீர்கள். அடிக்கடி நல்ல பயணங்களைச் செய்வீர்கள். அதன் மூலம் நல்ல விஷயங்களும் நடக்கும்.
வருமானம்
செலவுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு வருமானங்களும் இருக்கும். பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு 3 ஆம் இடத்துக்கு செவ்வாய் மாறுவதும், குருவின் பார்வையில் இருப்பதும் முயற்சிகள் அனைத்தும் பலிக்கும் தன்மை உண்டாகும். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து லாபங்கள் வரும் தன்மை உள்ளது.
தொழில்
மருத்துவம், விளையாட்டு, அதிகாரம், கட்டடம், நெருப்பு, பூமி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு 45 நாட்களுக்கு அமோகமான காலகட்டம். செம்மண் விவசாயகளிக்கு மிகப்பெரிய நல்ல பலன்கள் நடக்கும். செவ்வாய் நல்ல வலிமையான அமைப்பில் இருப்பதால் தம்பி, தங்கைகளிடம் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். அரசு வேலை, கலைத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
4 கிரகங்கள்
சோஷியல் மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். யோகாதிபதிகள் என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய், குரு 4 கிரகங்களும் வலிமையாக இருக்கும் சுப மாதமாக இருப்பதால் அற்புதமான மாதமாக இந்த செப்டம்பர் மாதம் அமையும். மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சி நிறைந்த காலகட்டம் என்பதால் இதனை பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
-
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications