செவ்வாய் பெயர்ச்சி பலன்: சிம்ம ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. பணமழை கொட்டப் போகுது
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 4க்கு உரியவர். சுகத்தையும், பாக்கியத்தையும், ராஜ யோகத்தையும் தரக்கூடியவர் செவ்வாய் பகவான். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் கெடாமல் இருந்த அனைத்து விதமான பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் வந்து அமர்கிறார். பாக்கியாதிபதி தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் தனத்தால் உங்களுக்கு பாக்கியம் கிடைக்கும்.
தொழில்
வேலை விஷயங்களில் அற்புதமான ஏற்றங்கள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும். பாக்கியாதிபதி 2 இல் அமர்ந்திருந்தாலும், 10 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்தோடு குருவுடன் சேர்ந்திருப்பதால் தொழில் ரீதியில் நன்மை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கோபம் வேண்டாம்
குடும்பத்தில் பிரச்சனையோடு இருந்தவர்களுக்கு இனி அந்த நிலை மாறும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்த கணவன், மனைவி சேரும் யோகம் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அனுசரணையாகச் சென்றால் நல்ல பலன்கள் அனுபவிக்கும் வாய்ப்புள்ளது. கோபத்தால் பலவற்றை இழக்க நேரிடும் என்பதால் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.
வீடு வாங்கும் யோகம்
செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமர்வதால் 4 ஆம் இடத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும். தாய் சார்ந்த விஷயங்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். வீடு அமையும் யோகம் உண்டு. கடந்த 2 மாதங்களாக வீடு வாங்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு தற்போது சுக்கிரன் பார்வை கிடைப்பதால் வீடு வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள். வீடு வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, வீட்டை புனரமைப்பது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள்.
வெளிநாடு யோகம்
தொலை தூரப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளிநாடு பாக்கியம், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமைவது, தொழில் அமைவது, வர்த்தகங்களை மேற்கொள்வது, வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். செவ்வாய் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள்.
பண விரையம்
ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது பயணம் செய்யும் யோகம் உண்டாகும். கடல் கடந்து செல்லும் வாய்ப்புள்ளது. தாய் தொடர்பான சிந்தனைகள், தாயின் உடல் நிலை, தாயின் சொத்துகள் தொடர்பான எண்ண ஓட்டம் அதிகரிக்கும். மனதில் குழப்பமான தன்மை இருக்கும் என்பதால் பண விரையமாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணத்தால் சில பிரச்சனைகள் வரும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.
பாக்கியங்கள்
செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நல்ல யோகமான காலகட்டமாக இருக்கும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம், தன பாக்கியம், வெளிநாட்டு பாக்கியம் போன்ற அனைத்தும் கிடைக்கும். விளையாட்டுத் துறையில் ஜொலிப்பீர்கள். அதிகாரம், நிர்வாகத்தில் சிறப்பு பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் யோகம் ஏற்படும். புதிய காரியங்களை செய்யும்போது யோசித்து செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications