தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. வீடு, தங்கம், நிலம் சொத்துகளை குவிக்கப் போறீங்க
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 6க்கு உரியவர், லாபாதிபதி. சுக்கிர பகவான் தற்போது 5 ஆம் இடத்தில் வந்து அமரப் போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், காதல் ஸ்தானத்தில் வந்து அமரப் போகிறார். பொதுவாக சுபகிரகங்கள் கோணத்தில் இருக்கும்போது அதீத நன்மைகளைச் செய்யும். 5 ஆம் இடத்தில் அமர்ந்து கொண்டு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்களுடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
குழந்தைகள் மூலமாக அனுகூலம், ஆதாயம் அடையக் கூடிய ஒரு சுக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான நினைத்த அத்தனை காரியங்களும் நிறைவேறும். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அந்த கனவு நிறைவேறும் காலகட்டம். குழந்தைகளின் படிப்பு நன்றாக இருக்கும். அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும்.
திருமண யோகம்
5 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், குரு உங்கள் ராசியையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சிறப்பு பெறும். புதிய உறவுகள் உங்கள் வாழ்க்கையில் வருவார்கள். சந்தோஷமான செய்திகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சுப காரியங்களைச் செய்யும் அமைப்புகள் சிறப்பு பெறும். உங்களுக்கு, உங்களுடைய குடும்பத்தினருக்கு சுப காரியங்கள் நடக்கும்.
காதல் கைகூடும்
5 ஆம் இடம் என்பது காதல் ஸ்தானம். காதல் காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் காதல் ஸ்தானத்தில் அமருவதால் காதல் கைகூடும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தின் ஆசிகள் கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும். பெண் தெய்வ வழிபாடுகளால் நன்மை கிடைக்கும்.
கடன் தீரும்
கடன், நோய், எதிர்ப்பு, பகையைத் தரக்கூடிய சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருப்பதால் கடன் தொல்லைகளைக் குறைக்கும். கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். கடனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உடல்நலனில் இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் நீங்கும். 6க்கு உரியவன் 12 இல் மறையும்போது கடன், நோய், வழக்கு, வம்பில் இருந்து விடுதலை உண்டாகும்.
வேலையில் கவனம்
வழக்கில் இருப்பவர்கள் வாபஸ் வாங்க கூடிய தன்மை, வழக்குக்கு முடிவுகட்டும் தன்மை சிறப்பு பெறும். வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வேலையில் அழுத்தம் உள்ளதால் அதில் இருந்து வெளியில் வந்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றும். அவசரப்பட்டு வேலையை விடாமல் இருப்பது நல்லது.
லாபம் பெருகும்
தொழிலில் லாபம் பெருகும். மதிப்பு கூடும். தேங்கிக் கிடக்கும் பொருள்கள் அனைத்தும் விற்பனையாகும். புதிய புதிய ஐடியாக்கள் தோன்றும். தொழில், வேலையில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். நல்ல உறவு கிடைப்பதற்கான சூழல் உருவாகும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கூடுதல் வேலையை செய்வது, தொழில் செய்வது போன்ற தன்மை உண்டாகும்.
சொந்த தொழில்
வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு உயர்வு, புகழ் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத் துறை சம்பந்தப்பட்ட, அழகுத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். ஜவுளித் துறையில் இருப்பவர்களுக்கு கணிசமான லாபம் கொடுக்கும். வெளிநாட்டு யோகம் கிடைக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும். அனுகூலத்தைக் கொடுக்கக்கூடிய சுக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதியில் உச்சம் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் யோகம் கிடைக்கும். உங்களை விட பெரியவர்களின் ஆசி, அருள் கிடைக்கும். பொது சேவைகளைச் செய்யும் யோகம் உண்டாகும். வெளிநாடு, அந்நிய முதலீடு, வெளிநாட்டு தொடர்பு, சாஃப்ட்வேரில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.












Click it and Unblock the Notifications