சுக்கிரன் பெயர்ச்சி: மேஷத்துக்கு தொட்டதெல்லாம் காசு பணம் துட்டு மணி மணி.. என்ஜாய் பண்ணுங்க
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், இன்று சுகாதிபதியான சுக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உலகில் உள்ள மனித உயிர்களின் காதலுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார்.

வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
நவக்கிரகங்களில் வலிமையானவரான சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனியின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண, தன லாபங்கள் அபரிமிதமாக கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பணம் சார்ந்த பிரச்சனைகள், நிதி நெருக்கடிகள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணப் புழக்கங்கள் சரளமாகும்.
சுபச்செலவுகள்
ராசிக்கு 2 ஆம் இடம் என்பது குடும்பம், தனம், வாக்கு ஸ்தானம் என்பதால் இந்த சுக்கிரப் பெயர்ச்சியில் உங்கள் யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும். வீண் விரைய செலவுகள் சுபச் செலவுகளாக மாறும். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். ராசிக்கு 2 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு சுக்கிரன் பயணிப்பதால் வார்த்தையில் இனிமை உண்டாகும். சொல்வாக்கு உயரும் காலகட்டமாக இருக்கும்.
தொழில்
ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானதிபதியான சனி பகவான், சுக்கிரனைப் பார்ப்பதால் வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய பொறுப்புகள் வரும்.
குடும்பம்
குடும்பம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். சுப காரியங்களை செய்து மகிழ்வீர்கள். நீங்கள் விரும்பியவாறு குழந்தைகளின் முன்னேற்றம், வளர்ச்சி, வாய்ப்புகள் நிறைந்து கிடக்கும். சகல விதமான மேன்மைகளும் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராசிக்கு 2 ஆம் இடமான 2, 7க்கு உரியவர் சுக்கிரன். ராசிக்கு 2 ஆம் இடமான தனது சொந்த வீட்டிலேயே சுக்கிரன் பயணிப்பதால் அபரிமிதமான பணம், சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
சனி ராசிக்கு 12 ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் பலம் பொருந்திய அமைப்பில் பயணிக்கிறார். அங்கிருந்து சுக்கிரனைப் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டம், பண வரவு உண்டாகும். ஏழரை சனி ஆரம்பித்திருந்தாலும், 11 ஆம் இடத்தில் ராகு பயணிப்பது பிரம்மாண்ட யோகத்தைக் கொடுக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டின் மூலமாக பண வரவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியையும் அதன் மூலம் லாபத்தையும் காண்பீர்கள்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பழிச்சொல், அவமானம் நீங்கம் காலகட்டமாக இருக்கும். செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் விசேஷமான காலமாக இருக்கம். மனதில் தைரியம், வீரம், துணிச்சல் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மையைப் பெறுவீர்கள். பண தன வரவுகள், திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் கிடைக்கும். நல்ல குடும்பம் அமையும், கணவன் மனைவக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
முன்னேற்றம்
பிரிந்த கணவன், மனைவி சேரக்கூடிய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் நிரந்தரமாகும். வியாபாரம், தொழிலில் லாபம் கிடைக்கும். கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல், லாபம் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications