சுக்கிரப் பெயர்ச்சியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. கிடைக்கப் போகும் யோக பலன்கள் என்ன, எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகின்றன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கும் காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் போகின்றன. யோக பலன்களை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2க்கு உரிய சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கிறார். பண விஷயங்களுக்கு எந்தப் பஞ்சமும் ஏற்படாது. சுக்கிரன் என்றாலே பெரும் பணம் என்று பொருள், அதனால் உங்களுக்குப் பணம் வரும்போதே பெரிய அளவில் வந்து சேரும். பங்குச் சந்தையில் அதிக அளவிலான யோகத்தைப் பெறுவீர்கள். பேச்சில் இனிமை உண்டாகும். பலகுரல் மன்னர்கள் எனும் மிமிக்ரி செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், வர்ணனையாளர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நல்ல இசை வாத்தியார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். அழகான இசைகளை அமைக்கும் வாய்ப்புள்ளது. மனைவியால் கிடைக்கும் வருமானம் உயரும். அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டாகும். அதன் மூலம் நல்ல பணவரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுக்கிர பகவானால் மிகப்பெரிய சந்தோஷமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
ரிஷப ராசி பலன்
சுக்கிரப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசியிலேயே வந்து சுக்கிரன் அமர்கிறார். உங்கள் எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். தன வரவு அதிக அளவில் இருக்கும். நல்ல குடும்ப அமைப்பு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்களுயை சுய மரியாதை, மதிப்பு சமுதாயத்திலும், குடும்பத்திலும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் காலகட்டமாக இருக்கும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.
சுகத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அது சாத்தியமாகும் காலமாக இருக்கும். உத்தியோக மாற்றம், வேலை மாற்றம், இடமாற்றம் என அனைத்து மாற்றங்களும் நிறைவேறும் வாய்ப்புள்ளது. அரசு, அரசு சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரம் உங்கள் கைக்கு வரும். சம்பள உயர்வு கிடைக்கும்.
முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். பயணங்கள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். முதலீடு செய்யும் யோகமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் வலிமை பெற்றுள்ளதால் கடன்களை அதிக அளவில் வாங்காமல் இருப்பது நல்லது. வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
துலாம் ராசி பலன்
சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு வந்து அமரப் போகிறார். வேலை, வியாபாரம், தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தை, காப்பீடு விஷயங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும். பணம், பொருளாதாரம் அருமையாக இருக்கும். உங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். செல்வாக்கு, திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். நிலம் விற்கும் வாங்கும் உண்டாகும். அதன் மூலம் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். புதிய வீடு வாங்குவது, கட்டுவது, அப்பார்ட்மெண்ட் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் வரும். கடன் வாங்கி புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக உயர்வு உண்டாகும். இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலுக்காக பயணங்கள் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். கணவன், மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட் உண்டாகும் வாய்ப்புள்ளது. அருமையான காலகட்டமாக இருக்கும்.
மீன ராசி பலன்
சுக்கிரன் 3 ஆம் இடம் எனும் முயற்சி ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். உங்களை வருத்திக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து வெளியில் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வலி, எதிர்ப்பு, பகை அனைத்தும் மாறும். வம்பு, வழக்கு, கோர்ட்டு விஷயங்கள் அனைத்தில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அனைத்தும் வந்து சேரும்.
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். திடீர் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசத்துக்குப் பயணம் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். குடும்பத்துக்குத் தேவையானவற்றை செய்வது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டை அழகுப்படுத்துவது, நிலம் வாங்குவது போன்றவை உண்டாகும்.
புதிய வாகனங்கள், பழைய வாகனங்களை மாற்றும் யோகம் உண்டாகும். கடன் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தன பாக்கியம் உண்டாகும். தொழிலில் மேன்மை ஏற்படும். கோயிலுக்குச் செல்வது, திருப்பணிகளைச் செய்வது, ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications