கோடீஸ்வர யோகம் பெறும் கும்ப ராசி.. குரு, சுக்கிரன் இணைவால் திடீர் அதிர்ஷ்டம் நிச்சயம்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது கும்ப ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் கும்ப ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்கு சுக்கிர பகவான் 5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், காதல் ஸ்தானம், பஞ்சம ஸ்தானத்தில் அமரப் போகிறார். சுக்கிரன் 4க்கு உரியவர். வீடு, வண்டி, வாகனம் போன்ற சுகத்தை தரக்கூடியவர். பாக்கியத்தை தரக்கூடியவரும் சுக்கிர பகவான் தான். ஒன்பது கிரகங்களில் ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். தற்போது 5 ஆம் இடம் எனும் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமருவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். நல்ல விஷயங்கள் நடக்க காத்துக் கொண்டிருக்கிறது.
அதிர்ஷ்டம்
கடந்த இரண்டரை வருடங்களாக மனம் சார்ந்த விஷயங்கள் மற்றும் நல்ல விஷயங்கள் நடக்காமல் இருந்திருக்கும். தற்போது அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதிர்ஷ்ட ஸ்தானத்தில் யோகாதிபதி அமர்ந்துள்ளதால் எதற்காக பாடுபட்டீர்களோ அந்த காலம் வந்துவிட்டது. குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
முன்னேற்றம்
குரு சுக்கிரன் இணைந்து 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். எண்ணங்கள், செயல்பாடுகள் அனைத்தும் லாப நோக்கத்தில் இருக்கும். படிப்படியாக உயர்வு பெற்றுக் கொண்டு முன்னேறுவீர்கள். இரண்டரை காலமாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். குடும்பம், பணம் குறித்த புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். அந்த அனுபவத்தின் வாயிலாக இப்போது செயல்பட ஆரம்பிப்பீர்கள். தனவரவில் திருப்தி ஏற்படும். தனம், லாபத்தை கொடுக்கக்கூடிய குரு சுக்கிரனோடு இணைந்து லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தன வரவு அற்புதமாக இருக்கும்.
பாக்கியங்கள் கொட்டும்
நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் பெயர், புகழ் கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விரக்தியில் இருந்த கும்ப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் துலங்க கூடிய காலகட்டமாக இருக்கும். அரசு, அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் ஜாக்பாட், அதிர்ஷ்டம் உண்டாகும். ஜூலை 31 ஆம் தேதி வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது வேலை, தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். அவற்றில் அடுத்த படியை எடுத்து வைப்பீர்கள்.
வெளிநாடு யோகம்
ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் மனதில் எழும் உங்களுக்கான விஷயங்களை செய்வீர்கள். தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருவீர்கள். வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டத்துக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேற்று மொழி, மதத்தினரால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பிஆர் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
ஆகஸ்ட் 12 முதல் 20 ஆம் தேதி வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது பணம் கொட்டும். செல்வ செழிப்பு உண்டாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். லக், பங்குச் சந்தையில் பண வரவு, லாட்டரி அடிக்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு விற்காத நிலங்கள் விற்கும். வீடு, நிலம், இடம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். ஸ்ரீ ரங்கம் சென்று வழிபாடு செய்வது செல்வ செழிப்பைத் தரும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications