குரு, சுக்கிரனின் அருளால் கன்னி ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது கன்னி ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் கன்னி ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் என்பது 2க்கு உரியவர். தனம், குடும்பம், வாக்கு, பாக்கியத்தைக் கொடுக்கக் கூடியவர். உங்களுக்கு யோகத்தை கொடுக்கக் கூடிய சுக்கிரன் 10 ஆம் இடத்தில் குருவோடு சேர்ந்து அமர்கிறார். பெரும் பணத்துக்கு காரணமான சுக்கிரனும், குருவும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தொழிலில் அபரிமிதமான பண வரவு உண்டாகும். தொழிலில் மாற்றங்களைச் செய்வது, விரிவுபடுத்துவது போன்றவற்றை செய்வீர்கள். கிளைகளை உருவாக்குவீர்கள். புதிய வேலையாட்களை பணியமர்த்துவீர்கள். வெளிநாட்டுக்கு செல்லும் அமைப்பு, மாவட்டம், மாநிலங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் யோகம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலை வளர்ப்பது, தனத்தை பெருக்குவது என யோகம் கொட்டும். சமுதாயத்திலும், குடும்பத்திலும் உங்களுக்கான மதிப்பு உயரும். மேலதிகாரிகள் உங்களைப் புகழும் சூழல் உண்டாகும். பாராட்டைப் பெறும் அமைப்பு உள்ளது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நன்மைகள் ஏற்படும். பேச்சில் இனிமை உண்டாகும். பணத்திற்குப் பஞ்சமே ஏற்படாது.
தொழிலில் முன்னேற்றம்
எதிர்பார்த்த கடன்கள் கட்டாயம் கிடைக்கும். கல்வி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள், கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். கல்வி, சட்டம், நிதி, நீதி துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டம். தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எந்த பாக்கியத்துக்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ அதை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வீடு வாங்கும் யோகம்
கணவன், மனைவி செட்டிலாகும் யோகம் உண்டு. 7 ஆம் பார்வையா 4 ஆம் இடத்தை சுக்கிரன், குருவும் பார்ப்பதால் சுக ஸ்தானம் விருத்தி அடையும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். நிலத்தில் முதலீடு செய்வீர்கள். ஜூலை 26 முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய் பகவானின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் எதிர்ப்பு, வம்பு, வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. ஆவணங்கள், வேலைகளில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
வெளிநாடு யோகம்
ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை ராகுவுடன் நட்சத்திரத்தில் பயணிப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை கண்டிப்பாக கிடைக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு வாணிபங்கள், ஏற்றுமதி, இறக்குமதியில் சிறப்பு பெறும். ராகுவுடன் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது உறவுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
யோகமான காலம்
ஆகஸ்ட் 12 முதல் 20 ஆம் தேதி வரை சுக்கிரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தன வரவு அபரிமிதமானதாக இருக்கும். வீடு, வண்டிகள் வாங்குவது, சொத்துகள் வாங்குவது, திருமணம் தொடர்பான விஷயங்களை செய்வது, கணவன், மனைவி சார்ந்த விஷயத்தில் நற்பலன்களை அடைவது என அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். ஸ்ரீரங்கம் சென்று வருவது சுகபோகத்தை அள்ளிக் கொடுக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications