Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2022: அக்டோபரில் மாளவியா யோகம், விபரீத ராஜ யோகத்தால் இவங்களுக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் காதல் நாயகன். கன்னி ராசியில் நீசம் பெற்ற நிலையில் இருந்து நகர்ந்து தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கூடவே சூரியனும் துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். ஆட்சி பெற்ற சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகமும், சிலருக்கு விபரீத ராஜயோகமும் சூரியனின் பயணத்தால் சிலருக்கு நீச்ச பங்க ராஜயோகமும் கிடைக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார்.

கன்னி ராசியில் சுக்கிரன் இருந்த போதும் ஆட்சி உச்சம் பெற்ற புதன் இருந்ததால் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார் சுக்கிரன். அக்டோபர் பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே நேரத்தில் சூரியன் நீச்சம் பெற்று அமரப்போகிறார்.

மாளவியா யோகம்

மாளவியா யோகம்

சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம், கும்ப ராசிகளில் நட்பு நிலையிலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். தனக்கு சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிக ராசியில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார். தனக்கு நிகரான பலம் வாய்ந்த, ஆனால் பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார். சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்றவர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏற்கனவே புத்தி நாதன் புதன் ஏழாம் விட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவது நன்மை தரும் அமைப்பாகும். மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. இதுநாள்வரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி வெற்றிகரமாக முடிவடையும்.

 ரிஷபம்

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைகிறார். ஆறாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் அமரப்போவதால் விபரீத ராஜயோகம் தேடி வரும். திடீர் பண வரவு வரும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளிடம் இருந்த தடைகள் நீங்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். வியாபாரம், கூட்டுத் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.

சிம்மம்

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள சுக்கிரன் அக்டோபர் மாதத்தில் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. இளைய தம்பிகள் தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்கள். காதல் ஜோடிகள் பேச்சில் கவனம் தேவை.

கன்னி

கன்னி

உங்கள் ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். காதல் மலரும் காலம் எனவே அக்டோபரில் உற்சாகமாகவே இருப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறுவதால் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதல் வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே..உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பத்துக்கு அதிபதி பத்தில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும். யாரிடமும் கோபப்பட்டு பேசி நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

கும்பம்

கும்பம்

உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் உங்க சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதல் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். பணவரவும் அதிகரிக்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும்,

மீனம்

மீனம்

உங்க ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக அமைப்பாகும். உங்க ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் உங்க ராசி லக்ன அதிபதிக்கு எதிரி. பகையாளி எட்டிற்கு உரியவன் எட்டில் மறையப்போவது ராஜயோகம்தான். இருந்தாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+