மேஷம் ராசிக்கு பராபவ வருடம் அதிர்ஷ்டமா?.. 2026 தமிழ் புத்தாண்டு பலன் முழு விவரம்!
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மேஷம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறிதது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். (Tamil puthandu palan 2026)
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. மேஷத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். எப்போதும் காணப்பட்டு வந்த மன அழுத்தம் நீங்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு பிரச்சனை போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடும் காலகட்டமாக இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக நடக்கும் காலகட்டம்.
உடற்பயிற்சி முக்கியம்
ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். மேஷம் ராசியினருக்கு உடற்பயிற்சி மட்டுமே சிறந்த பரிகாரமாக இருக்கும். கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தெய்வத்திடம் சரணாகதி அடைவது நல்லது.
ஏற்றம்
நிறைய நன்மைகள், சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டம். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை கிடைக்கும். கெளரவம் ஏற்படும். அரசாங்க அனுகூலங்கள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது மேன்மையை ஏற்படுத்தும். கத்துவது, சண்டை போடுவது, வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழக்குகள் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மேஷம் ராசியினருக்கு திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்து வருவது மற்றும் மகான்கள் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications