Tamil Puthandu Palan: கும்ப ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் குரு.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்கள் (Kumbam Rasi Palangal)
கும்ப ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும்போதே குரு பகவான் 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தொடங்குகிறார். கடந்த 5, 6 வருடங்களாக ஏழரை சனியால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டனர். உங்களுக்கு இருந்து வந்த பாதிப்புகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 5 இல் இருக்கிறார்.
குரு பார்வை
குருவின் பார்வை ராசியில் விழுவதால் உங்களுக்கு இந்த காலகட்டம் நன்றாக இருக்கும். பாசிட்டிவான நிலைமைகளை சந்திப்பீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். 6 ஆம் இடத்தில் குரு செல்லும்போது வளர்ச்சிக்கான கடன்கள் வரும். வீடு வாங்குவதற்கான கடன்கள், தொழில் தொடங்குவது, விரிவுபடுத்துவதற்கான கடன்கள், சொத்து வாங்குவதற்கான கடன், கடை, வியாபாரத்திற்கான கடன்கள் ஏற்படும். அந்த கடன்கள் மூலமாக முன்னேற்றங்கள் ஏற்படும்.
செல்வங்கள்
தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தர பணிகள் கிடைக்கும். யோகமான காலகட்டமாக இருக்கும். அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் யோகம் உண்டு. இழந்து போன செல்வங்கள் மீண்டும் திரும்ப கிடைக்கும். பிரிந்து சென்ற கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேரக்கூடிய பாக்கியம் ஏற்படும். தொழில் ரீதியான விஷயங்களில் நல்ல ஏற்றம் ஏற்படும்.
லாபம் கொட்டும்
வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் ஏற்படும். எல்லோரிடமும் நட்போடு பழகுவது நன்மை பயக்கும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை ஏற்படும். வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்படுவீர்கள். 2017 ஆம் ஆண்டில் இருந்து இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வழக்குகளில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும்.
வழிபாடு
வாய்க்கால் வரப்பு, சொத்து தகராறு ஏற்படும். வம்பு வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். முன்னோர் மற்றும் பெற்றோரின் சொத்துகள் வந்து சேரும். எல்லா விஷயங்களிலும் சுபிக்ஷமான சூழ்நிலை ஏற்படும். சுக்கிரன் வலுவாக அமர்ந்திருக்கிறார். பெரிய சிறப்புகள் வந்து சேரும். குரு பகவான் 6 இல் மறைவதால் திடீர் யோகம் ஏற்படும். காஞ்சி காமாட்சியம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வெற்றிகளை குவிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications