Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு கடன் வாங்குவதால் வரும் அதிர்ஷ்டம்.. பகையும் வரும் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)

கும்ப ராசிக்கு இந்த பராபவ ஆண்டில் டிசம்பர் மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும். குரு பார்வை இருப்பதால் ஜூன் மாதம் வரை எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஆனால், அதற்குப் பிறகுமிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகள், கடன்கள், பகைகள், ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவது, பெண்கள் எதிரியாவது போன்றவை ஏற்படும்.

tamil-puthandu-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-during-this-period

பணவரவு

பணத்திற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேனேஜர் பதவி போன்ற புரோமோஷன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் வாங்கியிருக்கும் கடன்கள் தீரும். குடும்பத்திற்காக கடன் வாங்கி நல்ல விஷயங்களைச் செய்வீர்கள். திருமணம் போன்றவற்றை நடத்தி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை நீங்கும்.

பகை உண்டாகும்

ராகு ராசி லக்கினத்தில் இருப்பதால் உங்களால் பிரச்சனை, சண்டை, வாக்குவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ராகு போய் அமர்வதால் முடிகளை சிறிதாக வெட்டிக் கொள்வது நல்லது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, புதிய ஆசைகள், புதிய விஷயங்கள் வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். குரு 6 ஆம் இடத்திற்குச் செல்வதால் தேவையில்லாத பகை, வழக்கு, பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

விவசாயிகள்

அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இருசக்கர வாகனம் கடனுக்கு வாங்குவது போன்ற சிறிய கடன்களை வாங்குவது தோஷத்தை நிவர்த்தி செய்யும். குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு அதிகம் இருக்கும் ஆண்டாக இருக்கும். விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்றவற்றை செய்து கொள்வது நல்லது.

வாய்ப்புகள் தேடி வரும்

புதிய வாய்ப்புகள் தேடி வரும். நான் என்கிற அகந்தையை விட்டு விடுவது நல்லது. பொறுமை, அமைதி, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சண்டை போட்டுதான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. சத்தமே இல்லாமல் எல்லா விஷயங்களையும் செய்வது நன்மை பயக்கும். வேலை நன்றாக இருந்தாலும் தேவையில்லாமல் அதை வைத்து சண்டை செய்வது, இரவில் செல்போன்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கடன் நல்லது

பணவரவுகள் தாரளமாக இருக்கும். 50 சதவீத கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன் வாங்குவது நன்மை பயக்கும். குரு 6 ஆம் இடத்தில் இருப்பதால் சிறிய கடன்களை வாங்கி அதனை கட்டிக் கொண்டிருப்பது நன்மை பயக்கும். ராகு ராசி, லக்னத்தில் இருந்தாலும் பட்ட இடத்திலேயே காயம் படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எல்லா விஷயங்களும் சாதகமாகவே இருக்கும்.

வழிபாடு

மாணவர்கள் முயற்சியில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கும்பகோணம் பூதராஜர் வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். 100க்கு 80 சதவீதம் நன்மைகளைப் பெறுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+