தை மாத பலன்: ரிஷப ராசிக்கு கஷ்டமெல்லாம் நீங்கும்.. இனி ஜொலிக்கப் போறீங்க
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.
ரிஷபம் தை மாத ராசி பலன் (Rishabam)
ரிஷப ராசிக்காரர்களுக்கு பாக்கியமான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். மூதாதையர் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு வந்து சேரும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு, சண்டை, பிரச்சனை, பஞ்சாயத்துகள் தீரும். பூர்வீக சொத்துகள், நிலபுலன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். தந்தையின் மூலமாக பணம் வந்து சேரும்.
வெற்றிகள்
அரசு மூலமாக வரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும். நிறைய பரிசகள், டொனேஷன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. கோவில் நடத்தக் கூடியவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தர்ம கட்டளைகள், அறக்கட்டளைகள் நடத்துவோருக்கு வெற்றிகள் கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பெயர், புகழ் கிடைக்கும்
பெயரும், புகழும் ஓங்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். பயணங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிரம்மாண்டமான வாகன யோகம் ஏற்படும். உங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுவாமி தரிசனம் செய்வது, குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
இடுப்பு, புட்டம், ஆசனவாய் பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் சூப்பராக இருக்கும். ஜம்புகேஷ்வரர் வழிபாடு உங்களுக்கு மேன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications